மதுரை:
மதுரையில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்) அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் நமது நாட்டிற்கும் ஜப்பான் அரசாங்கத்திற்கும் இடையே கடன் ஒப்பந்தம் மார்ச்கடைசி வாரத்தில் கையெழுத்தாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமூக ஆர்வலர் ஆர். பாண்டியராஜா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் எழுப்பியிருந்த கேள்விக்கு அளித்தபதிலில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி 2019-ஆம் ஆண்டு ஜனவரியில் மதுரை எய்ம்ஸ்க்கு அடிக்கல்நாட்டினார். இரு நாடுகளுக்கு இடையே கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில் தாமதம்ஏற்பட்டதால் அதன் கட்டுமானத் தில் தாமதம் ஏற்பட்டதாகக் காரணம் கூறப்பட்டது. இதற்கிடையே மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் ராஜேஷ்பூஷண், இணை செயலாளர் (எய்ம்ஸ்) நிலம்புஜ் ஷரன் ஆகியோர் மார்ச் கடைசி வாரத்தில்கடன் ஒப்பந்ததில் கையெழுத் திட வாய்ப்புள்ளதாக மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனிடம் கூறியிருந்தனர்.
எனினும் மதுரையில் ஏப்.2-ஆம் தேதி தேர்தல் பரப்புரைகூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, எய்ம்ஸ் மருத்துவ மனை பணிகள் எப்போது நிறைவடையும் என்பதை அறுதியிட்டுக் கூறவில்லை. அதே நேரத்தில் தொற்று நோய்களுக்கான தனி சிகிச்சைப் பிரிவு எய்ம்ஸ்ஸில் அமையும் எனக் கூறினார்.தொற்று நோய்க்கான தனிசிகிச்சைப்பிரிவும் இங்கு அமைவதால் இதன் திட்ட மதிப்பீடு ரூ.1,200 கோடியிலிருந்து ரூ.2,000 கோடியாக அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.