tamilnadu

img

சிபிஎம் தேனி மாவட்டச் செயலாளராக எம்.ராமச்சந்திரன் தேர்வு

தேனி, நவ.24- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின்  தேனி மாவட்டச்  செயலாளராக எம்.ராமச்சந்தி ரன் தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின்  தேனி மாவட்ட 9  ஆவது மாவட்ட மாநாடு சின்னமனூரில் நவம்பர் 23,24  ஆகிய தேதிகளில் நடைபெற்  றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.ராமச்சந்  திரன், கே.ஆர்.லெனின்,  மாவட்டக்குழு உறுப்பினர் என்.அம்சமணி ஆகியோர்  தலைமை வகித்தனர். மத்தி யக்குழு உறுப்பினர் பெ. சண்முகம் மாநாட்டினை தொடங்கி வைத்து உரை யாற்றினார். மாவட்டச் செய லாளர் ஏ.வி.அண்ணாமலை வேலை அறிக்கை சமர்பித் தார்.மாநாட்டினை வாழ்த்தி மாநில செயற்குழு உறுப்பி னர் மதுக்கூர் ராமலிங்கம், மாநிலக்குழு உறுப்பினர் ஏ. லாசர் ஆகியோர் பேசினர். மாநில செயற்குழு உறுப்பி னர் கே.பாலபாரதி நிறைவுரை யாற்றினார். கரண்குமார் நன்றி  கூறினார். புதிய மாவட்டக்குழு தேர்வு  மாநாட்டில் 35 பேர்கள்  கொண்ட  மாவட்டக்குழு தேர்வு  செய்யப்பட்டது.மாவட்டச்  செயலாளராக  எம்.ராமச்சந்  திரன் தேர்வு செய்யப்பட்  டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக டி.வெங்க டேசன், ஜி.எம்.நாகராஜன், டி.கண்ணன், கே.எஸ்.ஆறு முகம், சு.வெண்மணி,கே.ஆர்.லெனின் ,சி.முனீஸ்வ ரன், இ.தர்மர் ,எம்.வி.முரு கன் ஆகியோர் தேர்வு செய்  யப்பட்டனர். தீர்மானங்கள் திண்டுக்கல் சபரிமலை ரயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்க வேண்டும். போடி -மதுரை அகல ரயில் பாதையில்    காலை, மாலை இரு வேளை களில்,தேனி -மதுரை, தினந்  தோறும் தேனி -சென்னை, தேனி -கோவை ஆகிய வழித்  தடங்களில்  ரயில் சேவையை  துவக்க வேண்டும். திருப்பதி,  காசி வரை செல்லும் வகை யில் ரயில் சேவை தொடங்க  வேண்டும்.திருவில்லிபுத் தூர், மேகமலை புலிகள்  காப்பகத்தில்  பல தலைமுறை யாக குடியிருந்து விவசா யம் செய்து வரும் விவசாயி களுக்கு அவர்கள் விண்ணப்  பித்தபடி வன உரிமை சட்டப் படி பட்டா வழங்க வேண்  டும். அவர்களை வெளியேற்  றும் முடிவை கைவிட வேண்  டும். வைகை, சோத்துப்  பறை, மஞ்சளாறு அணை களை தூர்வார வேண்டும்.தேனி மாவட்டம் முழுவதும்  உள்ள குளம் கண்மாய்களை  தூர்வார நிதி ஒதுக்கீடு செய்ய  வேண்டும். முதல்வர் கொடு த்த வாக்குறுதிப்படி முல் லைப்பெரியாறு ஆற்றி லிருந்து ஆண்டிபட்டி ஒன்றி யத்தில் உள்ள கண்மாய், குளங்களுக்கு தண்ணீர் நிரப்பும் திட்டத்தை அம லாக்க வேண்டும். போடி  வன நிலங்களில் விவசாயம்  செய்து வரும் பழங்குடி மக்  கள், இதர மக்களுக்கும் பட்டா வழங்க வேண்டும்.  மலைச்சாலை திட்டங்களை  நிறைவேற்ற வேண்டும் என்பன  உள்ளிட்ட தீர்மானங்  கள் நிறைவேற்றப்பட்டன.