tamilnadu

img

செங்கல்பட்டில் எம்.முருகம்மாள் படத்திறப்பு

செங்கல்பட்டில் எம்.முருகம்மாள் படத்திறப்பு

செங்கல்பட்டு அடுத்த வல்லம் கிராமத்தில் காலமான எம். முருகம்மாள் உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகை யில் உடல் தானம் செய்யப்பட்டது. அவ ரது படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு மார்ச் 30 அன்று தோழர் எம்.ரவி இல்லத்தில் நடைபெற்றது. சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் வி.குமார், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ப.சு.பாரதி அண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.சங்கர், செங்கல்பட்டு பகுதிச் செயலாளர் கே.வேலன், சிஐடியு நிர்வாகிகள் பி.கே.வேலு, ஓ.செல்வமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ராஜ்குமார்  மற்றும் உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்று புகழஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றுபட்ட செங்கல்பட்டு-காஞ்சி புரம் மாவட்ட முன்னாள் செயற்குழு உறுப்பி னர், முன்னாள் செங்கல்பட்டு காட்டாங்  குளத்தூர் பகுதிகுழுச் செயலாளர் எம்.ரவி, மின் ஊழியர் மத்திய அமைப்பின் செங்கல்பட்டு கோட்டத் தலைவர், எம்.மனோகர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் வல்லம் கிளை நிர்வாகி ஜெயலட்சுமி, விஜயகுமாரி ஆகியோரின் தாயார், சிபிஎம் செங்கல்பட்டு பகுதி குழு உறுப்பினர் பரணி வர்மன், வல்லம் கிளைச் செயலாளர் ஆர். உதயணன் பாட்டியும் ஆவார்.