tamilnadu

img

அம்மாபட்டினம் ஆண்கள் நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு கடிதம்

அம்மாபட்டினம் ஆண்கள் நடுநிலைப் பள்ளியை  உயர்நிலைப்

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் அம்மாபட்டினம் அரசு ஆண்கள் நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தக்கோரியும், பெண்கள் தொடக்கப் பள்ளியை இருபாலர் தொடக்கப் பள்ளியாக ஒருங்கிணைப்பு செய்யக்கோரியும் மக்கள் விழிப்புணர்வு மைய தலைவரும், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவருமான நூர்முகமது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அம்மாபட்டினம் ஆண்கள் பள்ளியில் 6, 7, 8 வகுப்புகளில் சுமார் நூறு மாணவர்களுக்கும் மேல் படித்து வருகிறார்கள். எட்டாம் வகுப்பில் தற்சமயம் 35 மாணவர்கள் படித்து வருகிறார்கள். எட்டாம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் இவ்வூரில் உயர்நிலைப் பள்ளி இல்லாததால் வெளியூர்களுக்குச் சென்று படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வெளியூருக்குச் சென்று படிக்கும் மாணவர்கள் இடையிலேயே நின்று விடுகிறார்கள். இதனால் அவர்கள் கல்வித்தரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.  எனவே இவ்வூரில் ஒரு உயர்நிலைப் பள்ளி இருந்தால் மாணவர்கள் தொடர்ந்து கல்வி கற்க வசதியாக இருக்கும். மாணவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து பள்ளியின் வளர்ச்சி மேம்படும். எனவே அம்மாபட்டினம் ஆண்கள் நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்திட வேண்டும்.  மேலும் ஆண்கள் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயரும் பட்சத்தில், ஊரின் மையப் பகுதியில் இயங்கும் பெண்கள் தொடக்கப் பள்ளியை இருபாலர் பள்ளியாக ஒருங்கிணைப்பு செய்து தரவும், கேட்டுக்கொள்கிறோம். இதனால் மாணவர்கள் பாதுகாப்பு மற்றும் நலன் மேம்படும் என்பதாலும், அரசுக்கு நிதி நெருக்கடி ஏதும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்பதாலும், இதனை உடனே நிறைவேற்றி தர கேட்டுக்கொள்கிறோம் என்று கோரிக்கை மனுவில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார் பதிவாளர் அலுவலகக் கட்டுமானப் பணியை  விரைந்து தரமாக முடிக்க பொதுமக்கள் கோரிக்கை 

பாபநாசம் - கோபுராஜபுரம் சாலையில், பாபநாசம் நீதிமன்றத்தை அடுத்து சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த அலுவலக கட்டடம் பழுதின் காரணமாக இடிக்கப்பட்டு, புதிதாக கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதனால், வாடகை கட்டடத்தில் சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. ஒரு வருடகாலமாக நடந்து வரும் கட்டுமானப் பணியால், பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். சார் பதிவாளர் அலுவலகக் கட்டுமானப் பணியை விரைந்து தரமாக முடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து, அவர்கள் கூறுகையில் திருமணம், வீடு, நிலம் உள்ளிட்ட பல்வேறு பதிவுகளுக்கு சார் பதிவாளர் அலுவலகம் வர வேண்டியுள்ளது. பாபநாசம், மெலட்டூர், ரெங்கநாதபுரம், கபிஸ்தலம் அருகே பெருமாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வீடு, நிலம் உள்ளிட்ட பதிவுகளுக்காக வருகிறோம். மெதுவாக நடந்து வரும் கட்டுமானப் பணியை, மக்களுக்கான  அடிப்படை வசதிகளுடன் விரைந்து தரமாக முடிக்க வேண்டும் என்றனர்.