மதவெறி சக்திகளைத் தமிழ்நாட்டிலிருந்து விரட்டுவோம்!
வைகோ, பெ. சண்முகம் அறைகூவல் விராலிமலை, ஜன. 5 – மக்கள் ஒற்றுமையைச் சிதைக்கத் துடிக்கும் மதவெறி சக்தி களைத் தமிழ்நாட்டு மக்கள் அடையா ளம் கண்டு முறியடிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் பெ. சண்முகம் ஆகியோர் அறை கூவல் விடுத்துள்ளனர். சாதி, சமய நல்லிணக்கத்தை வலி யுறுத்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மேற்கொண்டுள்ள 11 ஆவது வரலாற்றுச் சிறப்புமிக்க நடை பயணத்தின் மூன்றாம் நாள் பொதுக் கூட்டம் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் எழுச்சியுடன் நடை பெற்றது. பெ. சண்முகம் இக்கூட்டத்தில் பங்கேற்று உரை யாற்றிய சிபிஎம் மாநிலச் செயலா ளர் பெ. சண்முகம், “தமிழகத்தில் சாதி, சமய நல்லிணக்கத்தைச் சீர்கு லைக்க ஒரு கூட்டம் திட்டமிட்டுச் செயல்படுகிறது. வழிபாட்டுத் தலங்களுக்குச் சம்பந்தமில்லாத அரசியல் முழக்கங்களை எழுப்பி பதற்றத்தை உருவாக்குவதே இவர் களின் வேலை. சுசீந்திரம் கோவிலில் ஆங்கிலேயருக்கு மன்னிப்புக் கடிதம் கொடுத்த சாவர்க்கரை வாழ்த்தி முழக்கமிடுவதன் அரசியல் என்ன? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கலவரத்தைத் தூண்டத் துடிக்கும் இந்துத்துவா சக்திகளின் ‘பேனை பெருமாளாக்கும்’ தந்திரத்தைப் பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் ஒற்றுமைக்காக வைகோ முன்னெடுத்துள்ள இந்தப் பயணம் தற்கால அரசியலில் மிக அவசியமான ஒன்றாகும். சமூக மற்றும் பொருளாதாரச் சமத்துவமே தமிழ்நாட்டின் நலனை முன்னி றுத்தும்” எனத் தெரிவித்தார். வைகோ நிறைவுரையாற்றிய வைகோ, “தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களை யும் இயற்கை வளங்களையும் காக்கவே எனது நடைபயணங்கள் அமைந்துள்ளன. இன்று பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே அதி கரித்து வரும் போதைப் பழக்கத் திற்கு எதிராகப் பெரும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. மறுபுறம், காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சேவுக்குச் சிலை வைக்கத் துடிக்கும் சக்திகள், நாட்டின் பெயரை மாற்றவும், சிறு பான்மையினரின் வாக்குரிமையைப் பறிக்கவும் முனைந்து வருகின்றன. தமிழ் பாடல்களை இந்தியில் எழுதி வைத்துப் படித்தால் மட்டும் தமிழ் நாட்டு மக்கள் பாஜகவை நம்பிவிட மாட்டார்கள். ‘யாதும் ஊரே யாவ ரும் கேளிர்’ என்ற பண்பாடு கொண்ட மண்ணில் மதவெறிக்கு இடமில்லை. மாநில உரிமைகளை வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக, 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலை மையிலான கூட்டணி மீண்டும் மகத்தான வெற்றி பெறுவது உறுதி” என முழக்கமிட்டார். மதிமுக மாவட்டச் செயலாளர் எஸ்.கே. கலியமூர்த்தி தலைமை யில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மதிமுக பொருளாளர் செந்திலதிபன், தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், எஸ்டிபிஐ தலை வர் நெல்லை முபாரக், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எம். சின்ன துரை எம்எல்ஏ, மாவட்டச் செயலா ளர் எஸ். சங்கர், சிபிஐ தேசியக் குழு உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்ட தோழமை கட்சித் தலைவர்கள் பலரும் திரளாகப் பங்கேற்றனர்.
