tamilnadu

‘மனுஸ்மிருதி’ அரசியலை வீழ்த்த ஓரணியில் திரள்வோம்! விசாகப்பட்டினம் சிஐடியு தொழிலாளர் திருவிழாவில் திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ் எழுச்சியுரை

‘மனுஸ்மிருதி’ அரசியலை வீழ்த்த ஓரணியில் திரள்வோம்! விசாகப்பட்டினம் சிஐடியு தொழிலாளர் திருவிழாவில் திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ் எழுச்சியுரை

விசாகப்பட்டினம், டிச. 28 -  ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்தியத் தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு)  18-வது அகில இந்திய மாநாட்டை முன்னிட்டு  ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘ஷ்ரமிக் உத்சவ்’ (தொழிலாளர் திருவிழா) சனிக்கிழமை அன்று  பிரம்மாண்டமான முறையில் தொடங்கியது. ஆந்திரப் பல்கலைக்கழக கண்காட்சி மைதா னத்தில் நடைபெற்ற இந்தத் தொடக்க விழாவில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட புகழ் பெற்ற திரைக்கலைஞரும் சமூகச் செயல் பாட்டாளருமான பிரகாஷ் ராஜ், ஒன்றிய அரசின் பாசிசப் போக்குகள் மற்றும் கார்ப்பரேட் சார்பு  கொள்கைகளைக் கடுமையாகச் சாடிப் பேசினார்.  உழைக்கும் வர்க்கத்தின் போராட்ட உணர்வை மேலோங்கச் செய்யும் விதமாக அமைந்த அவரது உரை, அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.  முரசறைந்து தொடங்கிய  தொழிலாளர் திருவிழா  நிகழ்வின் தொடக்கமாக, சிஐடியு ஆந்திர மாநிலத் துணைத் தலைவர் எம்.ஏ. கபூர்  தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத் தில், பிரகாஷ் ராஜ் மற்றும் இதரத் தலைவர்கள்  மேடையில் முரசறைந்து விழாவைத் தொடங்கி வைத்தனர். இது உழைக்கும் வர்க்கத்தின் கலாச்சாரப் பெருமையைப் பறைசாற்றுவதாக அமைந்தது. மேடையில் உரையாற்றத் தொடங்கிய பிரகாஷ் ராஜ், “லால் சலாம்... ஜெய் பீம்” என்ற முழக்கத்துடன் தனது உரையைத் தொடங்கினார். தனக்கும் சிஐடியு அமைப்புக்கும் இடையிலான உறவு இன்று நேற்றல்ல, தனது 18 வயதிலிருந்தே தெருநாடகங்கள் வழியாக உழைக்கும் மக்க ளின் விழிப்புணர்விற்காகத், தான் பணியாற்றி வருவதை அவர் பெருமையுடன் நினைவு கூர்ந்தார். சிஐடியு போன்ற உண்மையான போராட்ட அமைப்புகள் அழைக்கும்போது, ஒரு  கலைஞனாக மட்டுமன்றி ஒரு சமூகப் போராளி யாக அங்கே வந்து நிற்பது தனது கடமை என்று அவர் குறிப்பிட்டார்.  ஆர்.எஸ்.எஸ்: தாமரையின் அடியில் படர்ந்துள்ள நச்சு வேர்கள்  மத்தியில் ஆளும் கட்சியின் சித்தாந்தத் தளமான ஆர்.எஸ்.எஸ் அமைப்பை மிகக் கடுமையாக விமர்சித்த பிரகாஷ் ராஜ், “நூறு ஆண்டுகளைக் எட்டியுள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலிருந்து, நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்காகப் பங்களித்த ஒரு நபரின் பெயரைக் கூட யாராலும் சொல்ல முடியாது. இந்த நூறு ஆண்டுகளில் அவர்கள் சாதித்த ஒரே மாற்றம், அரைக்கால் சட்டையிலிருந்து முழுக்கால் சட்டைக்கு மாறியது மட்டும்தான்” என்று எள்ளி நகையாடினார். இந்தியாவை ஒரு தடாகமாக உருவகப்படுத்திய அவர், அந்த  ஏரியில் மிதக்கும் தாமரை பாஜக என்றால்,  அதன் அடியில் மறைந்திருந்து விஷத்தைப் பாய்ச்சும் வேர்கள்தான் ஆர்.எஸ்.எஸ்  என்றும், அந்த நச்சு வேர்களைப் பிடுங்கி யெறிய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் முழங்கினார்.  விற்கப்படும் தேசமும் கார்ப்பரேட் அரசியலும்  தொடர்ந்து பேசிய அவர், நாட்டில் மீண்டும் மனுஸ்மிருதி ஆட்சியை மறைமுகமாகக் கொண்டு வர ஆட்சியாளர்கள் முயன்று வருவ தாகக் குற்றம் சாட்டினார். இத்தகைய பிற்போக்குத் தனமான சித்தாந்தங்கள் மக்க ளின் உணர்வுகளைச் சிதைத்து, உழைக்கும் வர்க்கத்தை அடிமைப்படுத்தவே உதவும் என்று கவலை தெரிவித்தார். அரசாங்கம் பொதுச் சொத்துக்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்ப தைக் குறிப்பிட்ட அவர், “இங்கே விற்பவனும் இருக்கிறான், வாங்குபவனும் இருக்கிறான்.  அரசாங்கமே விலைக்கு வாங்கப்பட்டுவிட்ட தால், மக்களின் சொத்துக்கள் கார்ப்ப ரேட்டுகளின் கைகளுக்கு மிக எளிதாகச் சென்று விடுகின்றன. விசாகப்பட்டினம் எஃகு ஆலை  தனியார்மயமாக்கப்படுவது முதல் ஆந்திரா வில் மருத்துவக் கல்லூரிகளைப் பொது-தனி யார் பங்களிப்பு (PPP) முறையில் மாற்றுவது வரை அனைத்தும் சாதாரண மக்களுக்கு இழைக் கப்படும் பெரும் துரோகமாகும்” என்றார்.  அதிகார ஒடுக்குமுறையும்  ‘அச்சத்தின் பேரரசும்’  விமானப் போக்குவரத்துத் துறை உள்ளிட்ட முக்கியமான துறைகள் கார்ப்பரேட்டு களின் பிடியில் சிக்கியிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், கேள்வி கேட்பவர்களை அரசு ஒடுக்கு முறைச் சட்டங்கள் மூலம் மிரட்டுவதாகவும் சாடினர். “கேள்வி கேட்டால் சிறையில் அடைக் கிறார்கள். தியாகி ஸ்டான் சுவாமிக்கு ஒரு உறிஞ்சு குழாய் (Straw) கொடுக்கக்கூட மன மில்லாத இந்த அரசு, கௌரி லங்கேஷைக் கொன்றவர்களுக்குப் பிணை வழங்குகிறது. இவர்கள் பொய்களைக் கொண்டு ஒரு  ‘அச்சத்தின் பேரரசை உருவாக்க நினைக்