tamilnadu

img

மே 20 பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்

மே 20 பொது வேலை நிறுத்தத்தை  வெற்றிகரமாக்குவோம்

வடசென்னை மே தினகூட்டத்தில் ஏ.கே.பத்மநாபன் அறைகூவல்

சென்னை, மே 2 - மே 20 அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகர மாக்குவோம் என்று சிஐடியு அகில இந்திய துணைத்தலைவர் ஏ.கே. பத்மநாபன் அறைகூவல் விடுத்துள் ளார். 139ஆவது மே தின பேரணி, பொதுக்கூட்டம் ராயபுரத்தில் வியாழ னன்று (மே 1) நடைபெற்றது. சிஐடியு - ஏஐடியுசி வடசென்னை மாவட்டக் குழுக்கள் சார்பில் மின்ட் பாரத் திரையரங்கம் அருகில் தொடங்கிய பேரணி ராயபுரம் பழைய ஆடு தொட்டி அருகே நிறைவடைந்தது. பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்ம நாபன் பேசியதன் சுருக்கம் வரு மாறு:  தொழிலாளர்களுக்கு சங்கம் வைக்க, வேலை நிறுத்தம் செய்ய உரிமை வேண்டும், மே தினத்திற்கு  விடுமுறை வேண்டும், 8 மணி நேர வேலை, மகப்பேறு விடுப்பு வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை உருவாக்கி 1923ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன் முதலாக சென்னையில் தோழர் சிங்காரவேலர் தலைமையில் மே தினம் கொண்டாடப்பட்டது. தொழிலாளர் நலச்சட்டங்கள் அரசு தானாக முன்வந்து இயற்ற வில்லை. அனைத்து சட்டங்களும் தொழிலாளர்களின் போராட்டத்தால் இயற்றப்பட்டது. இந்த தொழிலாளர் சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு 4 தொகுப்புகளாக மாற்றி உள்ளது. போராடிப் பெற்ற உரிமைகளை பறிக்கிறது. அதனால்தான் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து அந்த சட்டத் திருத் தங்களை ரத்து செய்ய போராடிக் கொண்டிருக்கின்றன. அனைத்து துறைகளிலும் நிரந்தர தொழிலாளர்கள் இல்லாத நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் படிப் படியாக தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. அரசின் கொள்கைகள் தொழிலாளர்களை சுரண்ட எப்படி உதவுகிறது என்பதை  மக்களுக் கும் உணர்த்த வேண்டும். அப்போது தான் நாம் முன்னெடுக்கும் போராட்டம் வெற்றி பெறும். போராடி பெற்ற உரிமைகளை பாதுகாக்க மே 20ஆம் தேதி நடை பெறும் அகில இந்திய வேலை நிறு த்தம், புதிய வரலாறு படைக்கும் வகையில் வெற்றிபெறச் செய்வோம். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்திற்கு டி.வெங்கட் (சிஐடியு) தலைமை தாங்கினார். கே.சுந்தரம் (ஏஐடியுசி) வரவேற்றார். இ.அருணாச்சலம் (ஏஐடியுசி), ஆர்.ஜெயராமன், வி.குப்புசாமி, ஆர்.லோகநாதன், ஆர்.மணிமேகலை, வி.ஜெயகோபால் (சிஐடியு), எம்.எஸ்.மூர்த்தி, எஸ்.குப்பன், ஏ.அருள், வி.பெருமாள்சாமி, ஜி.ரேணுகா தேவி (ஏஐடியுசி) ஆகியோரும் பேசி னர். எஸ்.வெங்கடேசன் நன்றி கூறி னார்.