tamilnadu

img

‘ஜூலை 9’ - பொது வேலைநிறுத்தத்தை நாடு முழுவதும் வெற்றிகரமாக்குவோம்!

‘ஜூலை 9’ - பொது வேலைநிறுத்தத்தை நாடு முழுவதும் வெற்றிகரமாக்குவோம்!

மத்திய தொழிற்சங்கத் தலைவர்கள் முழக்கம்

சென்னை, மே 20 -  ஜூலை 9 அன்று நடைபெறும் நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கு வோம் என்று மத்திய தொழிற்சங்கத் தலைவர்கள் ஒருமித்து முழங்கினர். தொழிலாளர்களுக்கு எதிரான 4 சட்டத் தொகுப்புகளை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதி யத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும், பொதுத்துறை களை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும், ஒப்பந்த முறையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் சம்மேளனங்கள் சார்பில் மே 20 அன்று அகில இந்திய பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப் பட்டிருந்தது.  இதனிடையே, பாகிஸ்தான் உடனான எல்லையில் எழுந்த போர்ப் பதற்றத்தை யொட்டி, வேலைநிறுத்தம் ஜூலை 9-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதேநேரம், ஜூலை 9 வேலை நிறுத்தத்தின் கோரிக்கைகளை விளக்கி மே 20 அன்று நாடு முழுவதும் தொழிற்சாலைகள், நிறுவனங்களின் வாயில்களிலும், மாவட்ட தலைநகரங்களிலும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டங் கள் நடைபெற்றன. சென்னையில் எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறை  நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர் சம்மே ளனங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் பல்லவன் சாலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர்களிடம் தொமுச தலைவர் கி. நடராஜன் கூறுகையில், “ஒன்றிய அரசின் தொழிலாளர், விவசாயிகள், ஜனநாயக விரோத கொள்கைகளை கண்டித்து, பொது வேலைநிறுத்தம் செய்ய உள்ளோம். குறிப்பாக, 4 சட்டத்தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும், தேசிய பணமயமாக்கல் என்ற பெயரில் பொதுத்துறைகளை தனியார்மயமாக்கு தல் போன்றவற்றிற்கு எதிராக ஜூலை 9 ஆம் தேதி பொது வேலை நிறுத்தம் செய்யவுள்ளோம். வேலைநிறுத்த கோரிக்கைகளை விளக்கி பிரச்சார இயக்கங்கள், துண்டு பிரசுரம், சுவரொட்டி பிரச்சாரம் என பல்வேறு முறைகளில் வேலை நிறுத்த தயாரிப்பு பணி நடைபெறும். ஒன்றிய அர சுக்கு அனுப்ப வேண்டிய கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ளோம்” என்றார். சிஐடியு மாநில துணைப் பொதுச்செயலாளர் எஸ். கண்ணன், ஏஐடியுசி பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சுப்பிரமணிய பிள்ளை (எச்எம்எஸ்), சுகுமாறன் (ஐஎன்டியுசி), கோவிந்த ராஜ் (டபிள்யுபிடியுசி), சிவக்குமார் (ஏஐசிசிடியு), ஏ.எஸ். குமார் (ஏஐயுடியுசி), அந்திரிதாஸ் (எம்எல்எப்), பேரறிவாளன் (எல்எல்எப்), அருணாச்சலம் (யுடியுசி) உள்ளிட்டோர் பேசினர்.