ஒரு தாய் மக்களாய் வாழ்வோம்!
அயலகத் தமிழர் விழாவில் முதல்வர் வேண்டுகோள் சென்னை, ஜன. 12 - எந்தப் பிளவையும் அனு மதிக்காமல், தமிழர்கள் அனை வரும் ஒரு தாய் மக்களாய் வாழ்வோம் என்று அயலகத் தமிழர் விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற ‘அய லகத் தமிழர் தினம்- 2026’ விழா வில் பங்கேற்றும், விருதுகளை வழங்கியும் முதலமைச்சர் பேசி னார். அப்போது அவர் கூறிய தாவது: “தமிழர்கள் கனவு கண்டால், அதை நாம் அடைந்தே தீருவோம். மொழி உரிமைக்காக தனது உயிரைத் தியாகம் செய்தவர்கள். நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள். ஒரு தாய் மக்களாய் வாழ்வோம். நாம் அனைவரும் யாராலும் பிரிக்க முடியாத தமிழின சொந்தங்கள். நாடுகளும் கடல் களும் நம்மைப் பிரித்தாலும், மொழியும் இனமும் நம்மை உணர்வால் இணைக்கின்றன. கீழடி கண்டுபிடிப்புகள் மூலம் நான்காயிரம் ஆண்டு பழமை யான வரலாற்றுக்கு சொந்தக் காரர்கள் நாம் என்பது உறுதியாகி யுள்ளது. கீழடியில் நெல்மணிகள் பயிரிடப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. மொழி சிதைந்தால் இனம் சிதையும். இனம் சிதைந்தால் பண்பாடு சிதையும். பண்பாடு சிதைந்தால் அடையாளம் போய்விடும். அடையாளம் போய் விட்டால் தமிழர்கள் எனச் சொல்லும் தகுதியை இழந்துவிடு வோம்” என்று முதல்வர் தெரி வித்தார். விழாவில், அயல்நாடுகளில் மாணவர்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு நகர்வு, மனிதவள மேம்பாட்டு சான்றிதழ் உறுதிப்படுத்தல், மொழிப் பயிற்சி மற்றும் வெளிநாடுகளில் பணியமர்த்தல் சேவைகள் வழங்குவதற்காக ஓஎம்சிஎல் மற்றும் வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற் கொள்ளப்பட்டது. அமைச்சர் எஸ்.எம். நாசர், தலைமைச் செயலா ளர் நா. முருகானந்தம், விஐடி பல்கலைக்கழக நிறுவன வேந்தர் ஜி. விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
