tamilnadu

img

நிலப் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம்!

நிலப் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம்!

தஞ்சாவூர், திருக்குவளை கருத்தரங்குகளில் முனைவர் விஜூ கிருஷ்ணன் அறைகூவல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழு உறுப்பினரும், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளருமான தோழர் விஜூ கிருஷ்ணன், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் நடை பெற்ற கருத்தரங்குகளில் விவசாயிகள் நிலவுரிமை குறித்து உரையாற்றினார்.  “நிலத்துக்கான போராட்டத்தை இந்தியாவில் முன்னெடுத்தது கம்யூ னிஸ்ட் இயக்கம். 1936-இல் அகில இந்திய விவசாயிகள் சங்கம் உரு வானது. அசாம், திரிபுரா, உத்தரப் பிர தேசம், பஞ்சாப், பீகார், பெங்கால், மகாராஷ்டிரா, கர்நாடக, கேரளா, தமிழ்நாடு என பல்வேறு மாநிலங்களில் ஆயிரக்கணக்கான தியாகிகளால் நடத்தப்பட்ட போராட்டம் சாதாரண மானதல்ல. இன்று விவசாயிகளிடம் நிலம் இருப்பது என்றால் அது செங்கொடி இயக்கம் நடத்திய போராட்டம் தான் காரணம்,” என்று விவசாயிகளின் உரிமைப் போராட்ட வரலாற்றை விளக்கினார்.  “சோவியத் ரஷ்யாவில் 1917-இல் மாமேதை லெனின் உருவாக்கிய இயக்கம் ஒரு புரட்சியை நடத்தி எதிர் புரட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பி ஆட்சியை கைப்பற்றி அங்கு பெவிவசாயிகளுக்கு எதிரான ஒன்றிய அரசின் கொள்கைகள்ரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இதன் கார ணமாக உலகம் முழுவதும் உள்ள  விவசாயிகளும் விவசாய தொழிலா ளர்களிடம் மிகப்பெரிய மாற்றத்தை பெற்றனர்” என்று புரட்சிகரமான மாற்றத்தின் தாக்கத்தை விவரித்தார்.  “இங்கே உள்ள காகிதப் புலி சீமான் கம்யூனிஸ்டுகள் என்ன செய் தார்கள் என்று கேட்கிறார்.. கீழவெண்மணியும், வாச்சாத்தியும் கம்யூனிஸ்ட்கள் யார் என்பதை சொல்லும்,” என்று  விமர்சகர்களுக்கு சரியான பதிலளித்தார்.  “பல்வேறு மாநிலங்களில், சட்டங்களை காரணம் காட்டி, விவ சாயிகளை விவசாய நிலங்களில் இருந்து வெளியேற்றும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதும் நிலத்துக்கான போராட்டங் களை விவசாயிகள் சங்கமும், செங்கொடி இயக்கமும் முன்னெடுத்து வருகின்றன,” என்று தற்போதைய நிலைமையை விளக்கினார்.

விவசாயிகளுக்கு எதிரான ஒன்றிய அரசின் கொள்கைகள்

திருக்குவளையில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய விஜூ கிருஷ்ணன், “விவசாயிகளுக்கு ஒன்றிய அரசாங்கத்தால் அறிவிக்கப் படும் அறிவிப்புகள் எல்லாம் வெறும் வெற்று அறிவிப்புகளாகவே இருக்கிறது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு 50% உயர்த்தி தருகிறோம் என்றெல்லாம் அறிவிப்பு விடுகிறார்களே தவிர நடைமுறைக்கு வந்த பாடில்லை,” என்று கூறினார்.  “ஒன்றிய அரசு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2200 என்ற அறி விப்பைக் கொடுத்ததை தவிர செய்த பாடு இல்லை. பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் 800 முதல் 1200 வரை தான் இவர்கள் இன்றளவும் நெல் குவிண்டாலுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக கொடுத்து வரு கின்றனர். ஆனால் சிபிஎம் ஆளக் கூடிய கேரள மாநிலத்தில் நாட்டிலே யாரும் கொடுக்காத வகையில் நெல் குவிண்டாலுக்கு 2800 கொடுத்து வருகிறோம்,” என்று வேறுபாட்டை சுட்டிக்காட்டினார்.  “தமிழகத்தில் இன்று பெரும் பாலான உணவகங்களில், இந்தி படித்த வட மாநிலத் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அங்கு வேலை வாய்ப்புகள் இல்லை. சில மாநி லங்களில் உணவுக்கு பசி காரண மாக மாங்கொட்டை பருப்பை தின்று  வாழும் சூழ்நிலை. தென் மாநிலங் களில் அப்படி இல்லை,” என்று மாநிலங் களுக்கிடையேயான வேறுபாட்டை விளக்கினார்.  

கார்ப்பரேட் நலனுக்காக செயல்படும் அரசு  

“2014-இல் குஜராத்தில் உள்ள விவ சாயிகள் கூறினார்கள், ஒன்றிய அர சாங்கத்திற்கு ரங்கா-பில்லா என்ற  இருவர் வசூலித்து தரும் ஏஜெண்டு களாக மாறி உள்ளனர் என்றனர். அதா வது அதானியையும் அம்பானியையும் அவர்கள் அப்படி குறிப்பிட்டனர். ஒன்றிய அரசானது முழுமையாக கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விசுவாசியாக மாறிவிட்டது,” என்று  தோழர் விஜூ கிருஷ்ணன் குற்றம்சாட்டி னார்.  “இந்த ஒன்றிய அரசாங்கத்திடம் ஏழை விவசாயிகளுக்கு கொடுப்ப தற்கு நிலம் இல்லை. ஆனால் அம்பானி, அதானி போன்ற பெரு முதலாளி களுக்கும், கார்ப்பரேட் நிறுவனங் களுக்கும் கொடுப்பதற்கு லட்சக்கணக் கான ஏக்கர் நிலங்கள் உள்ளது. தொழில் பூங்கா என்ற பெயரில் விவசாயிகளி டம் இருக்கும் நிலத்தை பெரு முத லாளிகளுக்கு பறித்துக் கொடுக்கும் நிலை தான் நாடு முழுவதும் உள்ளது,” என்று விமர்சித்தார்.  “கிட்டத்தட்ட 18 லட்சம் ஏக்கருக்கு மேலான நிலங்கள் 4,500 தொழில் பூங்காக்கள் அமைக்க அரசால் அடி மாட்டு விலைக்கு வழங்கப்பட்டுள்ளது. திருக்கோவில்கள், தேவாலயங்கள், வக்பு வாரியங்களில் பல லட்சம் ஏக்கர்  நிலங்கள் உள்ளன. ஆனால் விவசாயி கள் விவசாயம் செய்ய உரம், இடு பொருட்கள், மானியங்கள் வழங்கப் படாமல் விவசாயிகள் வஞ்சிக்கப்படு கின்றனர்” என்று தனது கவலையை வெளிப்படுத்தினார்.  

விவசாயிகளின் தற்கொலைகளும் போராட்டங்களும்  

“மோடி ஆட்சிக்கு வந்த 10 ஆண்டு களில் கிட்டத்தட்ட 10 லட்சம் விவசாயி கள் உயிரிழந்துள்ளனர். மனித குல வரலாற்றில் அரசாங்கத்தின் நெருக்கடி களால் இப்படி லட்சக்கணக்கான தற்கொலைகள் நடந்ததில்லை,” என்று அதிர்ச்சித் தகவலை பகிர்ந்தார்.  “1995 முதல் 2014 ஆம் ஆண்டு வரை  அரசாங்கம் தந்த கணக்கின்படி 3 லட்சத்து 25 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2014-இல் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயி கள் தற்கொலை தடுக்கப்படும் என்று சொன்னார்கள்,” என்று கூறினார்.  “2019-ல் கொரோனா காரணமாக லாக் டவுன் வந்தது. அதை பயன்படுத்தி ஒன்றிய அரசாங்கம் மூன்று வேளாண் சட்டத்தை நாடாளுமன்றத்தில் இயற்றியது. அந்த சட்டமானது இந்திய விவசாயிகளுக்கும், இந்திய மக்களுக்கும் மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கக்கூடிய சட்ட மாகும். இந்தப் போராட்டக் களத்தில் 736 இந்திய விவசாயிகள் மரணமடைந்த னர். இந்தச் சட்டத்திலிருந்து ஒரு புள்ளி, கமா கூட வாபஸ் பெற முடியாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால் நவம்பர் 19, 2021 அன்று பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு  கோரி மூன்று வேளாண் சட்டங்களை யும் வாபஸ் பெற்றார்,” என்று விவ சாயிகளின் வெற்றியை நினைவு கூர்ந்தார்.  “டெல்லி சலோ என விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் ஏற்றுக் கொண்ட கோரிக்கைகளை, தொழிலா ளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது மோடி அரசு. விவசாயிகளும், தொழி லாளர்களும் செங்கொடி இயக்கத்தின் துணையோடு அச்சம் இல்லை, அச்சம்  இல்லை என சமரசமற்ற ஒரு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்,” என்று குறிப்பிட்டார்.  

இரட்டை எஞ்சின் ஆட்சிக்கு எதிரான போராட்ட அறைகூவல்

 “பாரதிய ஜனதா கட்சி நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நானூறு இடத்திற்கு மேல் வெற்றி பெறுவோம் என்றார்கள். அப்படி வந்தால் ‘ஒரே நாடு ஒரே தேசம் ஒரே மதம்’ என்ற திட்டத்தை செயல்படுத்தி இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு விவசாயிகளும், விவசாயத் தொழி லாளர்களும், செங்கொடி இயக்கத்தின ரும் தடையை ஏற்படுத்தி விட்டனர்”  என்று குறிப்பிட்டார்.  “இலங்கையில் விவசாயிகள் தொடங்கி வைத்து, மாணவர்கள், பெண்கள் நடத்திய போராட்டம் ஆட்சி யை மாற்றி அமைத்தது. அதேபோல் இங்கேயும் இரட்டை எஞ்சின் ஆட்சி யை மாற்றி அமைக்க மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம்,” என்று உறுதியான குரலில் அழைப்பு விடுத்தார்.  “பிரதமர் மோடிக்கு செங்கொடி என்றால் பயம், சிவப்பு என்றால் பயம்,” என்று தோழர் விஜூ கிருஷ்ணன் தனது உரையை நிறைவு செய்தார். 

திருக்குவளை கருத்தரங்கம்

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் அகில இந்திய 24-ஆவது மாநாட்டை முன்னிட்டு சிபிஎம் கீழையூர் மேற்கு ஒன்றியம் சார்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.  கீழையூர் மேற்கு ஒன்றிய செயலாளர் டி.வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கத்தில் சிபிஎம் நாகை மாவட்ட செயலாளர் வி.மாரிமுத்து சிறப்புரையாற்றினார். “ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட வரலாறு” என்ற தலைப்பில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உரையாற்றினார். இந்த கருத்தரங்க கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.சுப்பிரமணியன், டி.லதா, எம்.முருகையன், ப.சுபாஷ் சந்திரபோஸ், ஏ.வேணு, வி.அம்பிகாபதி, என்.எம். அபுபக்கர், மயிலாடுதுறை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். துரைராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.