காந்தியின் பெயரையும் ஏழைகளின் வாழ்வாதாரத்தையும் சிதைக்கும் மோடி அரசு நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் கடும் எச்சரிக்கை!
புதுதில்லி இந்தியாவின் கிராமப்புற ஏழைக ளுக்கு வாழ்வாதார உரிமை யை சட்டப்பூர்வமாக வழங்கிய ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை’ (MGNREGA) ரத்து செய்துவிட்டு, மத்திய அரசு கொண்டு வந்துள்ள ‘விக்சித் பாரத் கேரண்டி ஃபார் ரோஜ்கர் அண்ட் அஜீவிகா மிஷன் - கிராமின்’ (VB-G RAM G) மசோதா, மக்களவை யில் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வியாழனன்று நிறைவேற்றப்பட்டது. இந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய சிபிஐ(எம்)உறுப்பினர்கள், இந்த மசோதா ஏழைகளுக்கு வேலை வழங்குவதற்காக அல்ல, மாறாக மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கவும், மகாத்மா காந்தியின் அடையாளத்தை அழிக்கவுமே கொண்டு வரப்பட்டுள்ளது என்று சாடினர். திட்டத்தையே சிதைக்கும் நிதிப்பகிர்வு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக் குழு தலைவரும் கேர ளத்தின் ஆலத்தூர் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினருமான கே. ராதா கிருஷ்ணன் தனது உரையில், இந்த மசோதாவிற்குப் பின்னால் ஒளிந்தி ருக்கும் நிதிச் சதியை அம்பலப்படுத்தி னார். “2005-இல் இடதுசாரிகளின் அழுத் தத்தால் உருவாக்கப்பட்ட இந்தச் சட்டம், இதுவரை 100 சதவீத ஊதியச் செலவை மத்திய அரசே ஏற்று வந்தது. ஆனால், தற்போது 125 நாட்கள் வேலை என்று கவர்ச்சிகரமாக அறிவித்து விட்டு, அதற்கான 40 சதவீத நிதிச் சுமையை மாநில அரசுகள் ஏற்க வேண் டும் என்று மத்திய அரசு கூறுகிறது. ஒரு மாநிலத்தின் முன்னாள் முதல்வராக இருந்த ஊரக வளர்ச்்சித் துறை அமைச்ச ருக்கு மாநிலங்களின் நிதி நெருக்கடி தெரியாதது அல்ல. தெரிந்தே மாநிலங்க ளின் தலையில் சுமையை ஏற்று வது, காலப்போக்கில் இத்திட்டத்தை நிதிப் பற்றாக்குறையால் முடக்கிவிடும் செயலாகும்” என்று அவர் எச்ச ரித்தார். மேலும், கேரளாபோன்ற மாநி லங்கள் இத்திட்டத்தைப் பயன் படுத்தி வறுமையை ஒழிப்பதில் தேசிய அளவில் முதலிடம் வகிப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். உரிமைகளைப் பறிக்கும் தொழில்நுட்பத் தடைகள் மார்க்சிஸ்ட் கட்சியின் ராஜஸ்தான் சிகார் தொகுதி உறுப்பினர் அம்ரா ராம், கள யதார்த்தங்களை முன்வைத்து மசோதாவைச் சாடினார். “கடந்த நிதியாண்டில் வெறும் 5 சதவீத மக்களுக்கு மட்டுமே 100 நாள் வேலை வழங்க முடிந்தது. நிலுவையில் உள்ள கூலி நிலுவைத்தொகையையே இன் னும் வழங்காத அரசு, 125 நாட்கள் வேலை என்பது பாஜகவின் தேர்தல் கால வெற்று வாக்குறுதியைப் போன் ்றது” என்று அவர் குறிப்பிட்டார். தொழி லாளர்கள் தங்களுக்குத் தேவைப் டும்போது வேலை கோரும் உரி மையை இந்த மசோதா கட்டுப் படுத்துவதாகவும், டிஜிட்டல் வருகைப் பதிவு போன்ற நடைமுறைகள் சாதா ரண கிராமப்புறத் தொழிலாளர்களின் வாய்ப்புகளைப் பறிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். கேரளா அரசு இத் தொழிலாளர்களுக்காக நல வாரியம் அமைத்திருப்பதைப் போல, பாஜக ஆளும் மாநிலங்களில் ஏன் இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அடையாள அழிப்பும் அரசியல் உள்நோக்கமும் இரு தலைவர்களும் இத்திட்டத்தி லிருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதை கடுமையாக கண்டித்தனர். “தேசத்தந்தை மகாத்மா காந்தியை விடவும் ஒரு பெரிய ராம பக்தர் இருக்க முடியாது. ஆனால், அதே ராமரின் பெயரைப் பயன்படுத்தி காந்தியின் அடையாளத்தை வரலாற்றுப் பக்கங்க ளிலிருந்து துடைத்தெறியும் அரசி யலை இந்த அரசு முன்னெடுக்கிறது. இது காந்தியின் கொள்கைகளை விடவும், அவரைப் படுகொலை செய்த கோட்சேவின் கொள்கைகளுக்கே முன் னுரிமை அளிப்பதைக் காட்டுகிறது” என்று அவர்கள் ஒருமித்த குரலில் பதிவு செய்தனர். சுமார் 1,02,000 கோடியாக இருந்த பட்ஜெட் ஒதுக்கீடு 68,000 கோடியாகக் குறைக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டிய இடதுசாரி உறுப்பினர்கள், இந்த மசோதா “அனைவருக்கு மான வளர்ச்சி” (சப்கா விகாஸ்) என்ப தற்குப் பதில், ஏழைகளின் வாழ்வை அழிக்கும் “யாரையும் வாழவிடாத” போக்கைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தனர். மாநில அரசுகளை முடக்கி, கார்ப்ப ரேட் நலன்களுக்காகவும் அரசியல் லாபத்திற்காகவும் கிராமப்புற மக்களை வஞ்சிக்கும் இந்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என வலுவாக வலியுறுத்தினர்.
ஏழைகளின் புன்னகையைப் பறித்துவிட்டு ராமராஜ்ஜியம் நடத்த முடியுமா? சு.வெங்கடேசன் எம்.பி. ஆவேச உரை
ஜி ராம் ஜி மசோதா மற்றும் அணு சக்தி மசோதா பற்றி, மக்களவையில் வியாழனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ஆற்றிய உரை வருமாறு: இன்றைய தினம் இந்த அரசு இரண்டு பெரும் துயரங்களை இந்திய மக்கள் மீது சுமத்தியிருக்கிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் பல இருந்தாலும், அரசின் நிதி கடைக்கோடி இந்தியரின் கைகளுக்கு நேரடியாகச் சென்றடைகிறது என்றால், அது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலமாகத்தான். இன்று அந்த உரிமையை நீங்கள் தட்டிப் பறித்திருக்கிறீர்கள். ஏழைகளின் புன்னகையைப் பறித்துவிட்டு, இன்னொரு பக்கம் பல ஆயிரம் கோடி ரூபாய் புழங்கும் அணுசக்தித் துறையை கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்த்திருக்கி றீர்கள். ஒரே நாளில் இரண்டு பெரும் துரோகங்களை இந்த அவை வாயிலாக நாட்டிற்குச் செய்திருக்கிறீர்கள். எளியவர்களுக்குக் கட்டுப்பாடுகள்; கார்ப்பரேட்டுகளுக்குச் சுதந்திரம்: ஒருபக்கம் ஏழைகளின் வேலைக்கு ‘கைரேகை’ (Biometric) கட்டாயம் என்று நிபந்தனை விதிக்கிறீர்கள். ஆனால், இன்னொரு பக்கம் பேரழிவை உருவாக்கக் கூடிய தனிமங்களையும், கனிமங்களையும் பயன் படுத்துவதற்கான கட்டற்ற சுதந்திரத்தைக் கார்ப்பரேட்டு களுக்கு வழங்குகிறீர்கள். இது மிகப்பெரிய முரண்பாடு மட்டுமல்ல, கொடுமையும் கூட. உரிமைத் திட்டத்தைச் சேவைத் திட்டமாக மாற்றிய அவலம்: இதுவரை ‘வேலை உரிமைத் திட்டமாக’ இருந்த மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தை, இன்று வெறும் ‘நலத் திட்டமாக’ அல்லது ‘சேவைத் திட்டமாக’ இந்த அரசு மாற்றிவிட்டது. உங்களுக்கு ‘உரிமை’ என்றாலே பிடிக்காது. மக்களின் உரிமைகளைப் பறிப்பதையே இந்த அரசு தனது முழுநேரத் தொழிலாகக் கொண்டுள்ளது. திட்டத்தின் வரலாற்றுப் பயன்கள் புறக்கணிப்பு: இத்தனை ஆண்டு காலம் இத்திட்டம் அமலில் இருந்ததால், இந்தியாவின் பொதுச் சொத்துகள் பெருகின; நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது; கிராமப்புற மக்கள் பிழைப் புக்காக நகரங்களுக்குப் புலம்பெயர்வது குறைந்தது. குறிப்பாக பட்டியலின மக்கள், பழங்குடியினர், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் இது மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியது. இன்று அந்த அடித்தளத்தையே நீங்கள் தகர்த்துவிட்டீர்கள். மசோதாவின் நான்கு முனைத் தாக்குதல்கள்: இன்றைக்கு நீங்கள் கொண்டு வந்திருக்கும் இந்தச் சட்டம் நான்கு முக்கியத் தளங்களில் தாக்குதல் நடத்து கிறது: H மக்களின் அடிப்படை வேலை உரிமையைப் பறித்துள்ளது. H மாநில அரசுகளின் பொருளாதாரத்தை கடுமையாகப் பாதித்துள்ளது. H திட்டத்திலிருந்து அண்ணல் காந்தியின் பெயரை நீக்கி அவரை அவமதித்துள்ளது. Hபெயரிலேயே இந்தியைப் பலவந்தமாகத் திணித் துள்ளது. நான்கு திசைகளிலிருந்தும் அநீதியை இழைப்பதையே நீங்கள் இலக்காகக் கொண்டுள்ளீர்கள். வழக்கம்போல, உங்கள் அநீதிகள் அனைத்தையும் மறைக்க ‘ராமரைத்’ துணைக்கு அழைக்கிறீர்கள். இந்த மசோதாவிற்கும் ராமரின் பெயரையே சூட்டியுள்ளீர்கள். புராணங்களின்படி அநீதியை அழிப்பதுதான் ராமனின் செயல் என்றால், உங்களின் இந்த அநீதியான ஆட்சியை வீழ்த்தும் வேலையை எதிர்க்கட்சிகளோடு சேர்ந்து அந்த ராமனும் செய்வான். இவ்வாறு அவர் பேசினார்.
