கடலூர், அக். 4 - தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பாக “சவால்களை எதிர்நோக்கும் மின் நுகர்வோர்கள்- மின்வா ரிய தொழிலாளர்கள்” என்ற தலைப்பில் கட லூரில் திறந்தவெளி கருத்தரங்கம் நடை பெற்றது. இதில் சிஐடியு மாநில தலைவர் அ. சவுந்தரராசன் உட்பட பல்வேறு தலை வர்கள் உரையாற்றினர். அ.சவுந்தரராசன் தனது உரையில், தனி யார்மயம் மற்றும் தாராளமயம் மக்களின் அத்தியாவசிய சேவைகளை இலக்கு வைப்ப தாகவும், பெரு முதலாளிகள் மக்களின் சொத்துக்களை அபகரித்துக் கொண்டு குறைந்த வரி செலுத்துவதாகவும் குற்றம்சாட்டினார். மின்வாரியத்தில் ஸ்மார்ட் மீட்டர் அறி முகம் தொழிலாளர் வேலை இழப்புக்கு வழி வகுக்கும் என்றும் அவர் எச்சரித்தார். மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் எஸ். ராஜேந்திரன் பேசு கையில், அரசு சொந்த உற்பத்தியை புறக்க ணித்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவ தாக குற்றம்சாட்டினார். ஸ்மார்ட் மீட்டர் அறி முகம் பல்லாயிரக்கணக்கான மின்வாரிய ஊழியர்களின் வேலையை பறிக்கும் என்றும் அவர் கூறினார். மாநிலத் தலைவர் டி.ஜெய்சங்கர், தனி யார் நிறுவனங்கள் மின்சாரத் துறையில் லாப வேட்டை நடத்துவதாகவும், அரசு அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவ தாகவும் குற்றம்சாட்டினார். மாநிலத் துணை செயலாளர் டி. பழனி வேல், மின்சார வாரியம் நான்கு பிரிவு களாக பிரிக்கப்பட்டால் விவசாயம், கைத்தறி மற்றும் கோயில்களுக்கான மானியங்கள் பாதிக்கப்படலாம் என்று எச்சரித்தார். பேச்சாளர்கள் அனைவரும் தொழிலா ளர் உரிமைகள், மின்சார துறையின் தனியார் மயமாக்கல் மற்றும் அதன் விளைவுகள் குறித்து கவலை தெரிவித்தனர். சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதர வாக அக்டோபர் 5 அன்று இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளன. அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் நாடுவோம் என்றும் தெரிவித்தனர். கருத்தரங்கில் எஸ்.ரவிச்சந்திரன், எம்.வெங்கடேசன், கே.அம்பிகாபதி, என்.தேசிங்கு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
‘தொழிலும் முக்கியம்; தொழிலாளரும் முக்கியம்!’
கடலூரில் நடைபெற்று வரும் சிஐடியு மாநில நிர்வாகக் குழு கூட்டத்தைத் தொடர்ந்து, மாநில தலைவர் அ.சவுந்தரராசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தின் தொழில் நிலைமைகள் குறித்து கவலை தெரிவித்தார். “தமிழகத்திலிருந்து வேறு மாநிலங்களுக்குச் செல்லும் தொழில்கள், தொழில் நெருக்கடியால் ஏற்படும் வேலை இழப்பு ஆகியவை தொழிலாளர்களைக் கடுமையாகப் பாதிக்கின்றன” என்று அ.சவுந்தரராசன் கூறினார். வெளிநாட்டு மூலதனம் மற்றும் புதிய தொழிற்சாலைகள் வரவேற்கத்தக்கவை என்றாலும், ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகள் மூடப்படாமல் இருப்பதும், தொழிலாளர்கள் வேலை இழக்காமல் இருப்பதும் முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார். பாரம்பரிய தொழில்களின் அழிவு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என எச்சரித்த அ.சவுந்தரராசன், “1990க்குப் பிறகு ஒன்றிய-மாநில இரு அரசுகளுமே பன்னாட்டு முதலாளிகளின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளித்து, தொழிலாளர் உரிமைகளைப் புறக்கணிக்கின்றன,” என்று குற்றம்சாட்டினார். தொழிற்சங்கப் பதிவு தாமதம் குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். “45 நாட்களில் பதிவு செய்ய வேண்டும் என்ற சட்டம் மீறப்படுகிறது. சாம்சங் தொழிற்சங்கப் பதிவிலும் இதே நிலைதான் உள்ளது,” என்றார். போக்குவரத்துத் துறையில் 105 மாதங்களாக பஞ்சப்படி வழங்கப்படவில்லை என்றும், தொழிலாளர்கள் தொடர்ந்து 9-வது ஆண்டாக கருப்புத் தீபாவளியை அனுபவிக்க நேரிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். “தமிழகத்தில் தொழிலாளர் பிரச்சனைகளையும், தொழில் பிரச்சனைகளையும் தீர்த்து வைக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று சிஐடியு மாநிலக் குழு வலியுறுத்துவதாக சவுந்தரராசன் தெரிவித்தார். இந்தப் பேட்டியின் போது மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், மாநிலச் செயலாளர் கே.சி.கோபிகுமார், மாநில துணைத் தலைவர் பி.கருப்பையன், கடலூர் மாவட்டச் செயலாளர் டி.பழனிவேல் ஆகியோரும் உடனிருந்தனர்.