கேரளத்தை பழிவாங்கும் ஆர்எஸ்எஸ் - பாஜக சூழ்ச்சி முறியடிப்பு அனைத்துத் துறைகளிலும் எல்டிஎப் அரசு சாதனை!
பாலக்காடு, மார்ச் 28- கடந்த பத்தாண்டுகளில், இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் கேரளம் சாதனை படைத்திருப்பதாக முதல மைச்சர் பினராயி விஜயன் தெரி வித்துள்ளார். குறிப்பாக, விவசாயத்துறையில், காய்கறி மற்றும் பழங்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை (Floor price) அறிவித்த நாட்டின் முதல் மாநிலம் கேரளம் என்பதையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். மலம்புழா தொகுதியில் உள்ள எலப்புள்ளி பாராவில் நடைபெற்ற இடது ஜனநாயக முன்னணியின் தேர் தல் பிரச்சாரக் கூட்டத்தைத் தொடங்கி வைத்து பினராயி விஜயன் உரை யாற்றினார். அப்போது, அவர் பேசி யிருப்பதாவது: பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளை ஏற்க கேரளம் தயா ராக இல்லை. இதுவே, கேரளம் சரிந்து விழட்டும் என்ற ஒன்றிய அரசின் அணுகுமுறைக்குக் காரணம். 2016-க்கு முன் கேரளம் முற்றிலும் வீழ்ச்சி யடைந்த நிலையில் இருந்தது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சி செய்த எல்.டி.எப் அரசு கேரளத்தை உலக அரங்கின் கவனத்திற்குக் கொண்டு வந்தது. மாநிலத்தை அதீத வறுமையிலிருந்து விடுவித்தது. உலகிலேயே அதிக ஏழைகளைக் கொண்ட நாடான இந்தியாவில் இது சாத்தியமானது. தலா ரூ.4 லட்சம் செலவில் கட்டப்பட்ட 4 லட்சம் வீடுகள் 2016-ல் ‘லைப் மிஷன்’ (Life Mission) திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டது. 2021-க்குள் வீடுகள் கட்டும் பணியின் பெரும்பகுதி முடிக்கப்பட் டது. 2021 தேர்தலில், தாங்கள் ஆட் சிக்கு வந்தால் ‘லைப் மிஷன்’ திட்டத்தை ரத்து செய்வோம் என்று யு.டி.எப் அறிவித்தது. ஏழைகளுக்கு வீடு வழங்குவதை நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள்? மக்கள் தொடர்ந்து எல்.டி.எப்-ஐ ஆட்சியில் அமர்த்தினர். ஐந்து லட்சம் பேருக்கு, தலா நான்கு லட்சம் ரூபாய் செலவில் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. வேளாண்மைத் துறையில் வரலாற்றுச் சாதனை யு.டி.எப் காலத்தை விட கடந்த 10 ஆண்டுகளில் மாநிலத்தின் விவ சாயத் துறை வரலாற்றுச் சாதனை களை படைத்துள்ளது. 2023-24 நிதி யாண்டில் நாட்டின் விவசாய வளர்ச்சி விகிதம் 2.1 சதவிகிதமாக இருந்த போது, கேரளம் 4.65 சதவிகிதத்தை எட்டியுள்ளது. தேசிய வளர்ச்சியை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான சாதனையை மாநிலம் செய்திருப்பது பெருமைக்குரிய விஷயம். 2016-ல் எல்.டி.எப் ஆட்சிக்கு வந்த போது விவசாயத் துறை அழிவின் விளிம்பில் இருந்தது. விவசாய உற் பத்தியும் நிலப்பரப்பும் குறைந்தி ருந்தன. விவசாயிகள் தற்கொலை என்பது தொடர்கதையாக இருந்தது. அந்தச் சூழலில் இருந்து விவசாயி களின் வருமானத்தை 50 சதவிகிதம் உயர்த்துவோம் என்ற தமது ஆரம்ப கால வாக்குறுதியை எல்.டி.எப் அரசு நிறைவேற்றியது. வருமானத்தை இரட்டிப்பாக்க நீண்ட காலத் திட்டங் களும் வகுக்கப்பட்டன. ரூ.16 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு நெல் உற்பத்தி மற்றும் சேமிப்பில் அதிகரிப்பு ஏற்பட்டது. 2011-16 காலப் பகுதியில் 25 லட்சத்து 67 ஆயிரம் டன் நெல் சேமிக்கப்பட்ட நிலையில், 2016-21ல் 30 லட்சத்து 99 ஆயிரம் டன்னாக உயர்ந்தது. அதன் பிறகு 26 லட்சத்து 20 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. யு.டி.எப் காலத்தில் விவசாயிகளுக்கான நிதி உதவி 4,674 கோடி ரூபாயாக இருந்தது, ஆனால் எல்.டி.எப் அரசு 2016-21ல் 7,916 கோடி ரூபாயையும், 2021-26 வரை தற்போது வரை 7,916 கோடி ரூபாயை யும் விநியோகித்துள்ளது. நெல் கொள்முதல் விலை கிலோ வுக்கு 30 ரூபாயாக நிர்ணயிக்கப்பட் டது. உற்பத்தித் திறன் 2.83 டன்னிலி ருந்து 3.01 டன்னாக அதிகரித்தது. தேங்காய், பழங்கள் மற்றும் காய்கறி உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தது. காய்கறி உற்பத்தி 6,25,000 டன்னிலிருந்து 19 லட்சம் டன்னாக உயர்ந்தது. தோட்டப் பயிர் வரி ரத்து செய்யப்பட்டது. விவசாயப் பொருட்களுக்கு நியாயமான சந்தை மற்றும் விலையை உறுதி செய்யும் நோக்கில், காய்கறி மற்றும் பழங்க ளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை யை (Floor price) அறிவித்த நாட்டின் முதல் மாநிலம் கேரளம். இவ்வாறு முதலமைச்சர் பினராயி விஜயன் கூறினார்.
