tamilnadu

img

வகுப்புவாதத்திற்கு எதிராக போராடும் எல்.டி.எப். மீண்டும் வெற்றி பெறும்! உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த பின் எம்.ஏ. பேபி பேட்டி

வகுப்புவாதத்திற்கு எதிராக போராடும் எல்.டி.எப்.  மீண்டும் வெற்றி பெறும்! உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த பின் எம்.ஏ. பேபி பேட்டி

திருவனந்தபுரம், டிச. 9 - கேரளத்தில் உள்ளாட்சித் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு செவ்வாயன்று நடைபெற்றது. இதில் திருவனந்தபுரம் சமஸ்கிருதக் கல்லூரி வாக்குச் சாவடி யில் தமது துணைவியாருடன் சிபிஎம்  பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி வாக்க ளித்தார். பின்னர் அவர் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: எல்.டி.எப் இதற்கு முன்பு பல கட்டங் களில் அற்புதமான வெற்றியைப் பெற  முடிந்தது. இந்த முறை அதை மீண்டும் நிலை நிறுத்தும் முடிவு வரும். ஏனெ னில், கேரள அரசியல் வரலாற்றில் எல்.டி.எப். தொடர்ச்சியான ஆட்சியை வழங்கிய காலகட்டத்தில் மூன்று அடுக்கு தேர்தல்கள் நடத்தப்படுவது இதுவே முதல் முறை. அந்த தொடர்ச்சியான ஆட்சியின் வளர்ச்சி மற்றும் நல நட வடிக்கைகளைப் பார்த்து மக்கள் மூன்று அடுக்கு உள்ளாட்சி நடவடிக்கைகளை மதிப்பிடுகிறார்கள். அதனால்தான் கேரளம் முழுவதும் எல்.டி.எப் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். அமைதியாக வாழும் மக்களை கவலையடையச் செய்யும் ஒரு விஷயம், மக்களை வகுப்புவாத அடிப்படையில் பிரிப்பதாகும். தேர்தல் காலத்தில் அந்த வகுப்புவாதமும் மிகவும் பரவலாக விவாதிக்கப்பட்டது. அனைத்து வகை யான வகுப்புவாதத்திற்கும் எதிராக சமரச மற்ற நிலைப்பாட்டை எடுப்பது இடது சாரிகள் தான். அதுவும் கேரளத்தில் விவாதிக்கப்பட்டது. அதன் செல்வாக்கு தேர்தல்களிலும் இருக்கும் என்று எம்.ஏ. பேபி கூறினார். 74 சதவிகிதம் வாக்குப் பதிவு கேரளத்தில் இரண்டு கட்டமாக உள்ளா ட்சித் தேர்தல்கள் நடைபெறுகின்றன. முதற்கட்டமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் ஆகிய 7 மாவட்டங்களில் செவ்வாயன்று (டிசம்பர் 9) வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 5 மணி வரை 74 சதவிகிதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. வியாழ னன்று (டிச.11) இரண்டாம் கட்ட தேர்தல்  நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம்  செவ்வாயன்று மாலையுடன் நிறை வடைந்தது.