tamilnadu

img

இசையாகவே வாழும் இளையராஜா!

இசையாகவே வாழும் இளையராஜா!

இசைஞானி இளைய ராஜாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தமது சமூக வலைத்தள பக்கத்தில் வாழ்த்துப் பதிவிட்டுள்ளார். அதில், “இசையமைப் பாளர் இளையராஜா அவர்களின் இசைப்பய ணத்தில் மேலும் ஒரு மணி மகுடமாக லண்டனில் மார்ச் 8  அன்று சிம்பொனி இசையை அரங்கேற்ற உள்ளார். பீத்தோவன் போன்ற இசை மேதைகள் சிம்பொனி இசைக் கோர்வையை அரங் கேற்றிய இடத்தில் இளைய ராஜாவின் சிம்பொனி இசை யும் மக்கள் முன்னால் அரங்கேற உள்ளது மகிழ்ச்சிக்கும், பாராட்டு தலுக்கும் உரிய சாதனை யாகும்.  தனது மூத்த சகோதரர் பாவலர் வரத ராஜன் அவர்களோடு பொது வுடமை இயக்க மேடை களில் துவங்கியது இளைய ராஜாவின் இசைப் பயணம். இதுவரை 1500-க்கும் மேற் பட்ட திரைப்படங்களில் 15000-க்கும் மேற்பட்ட பாடல் களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா, ஏராளமான இசை ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார். இளைய ராஜா தனது புதிய சாதனை மூலம் தமிழ்நாட்டிற்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்க்க உள்ளார்.  இசையாகவே வாழும் இளையராஜாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு சார்பில் வாழ்த்துக் களையும், பாராட்டுக்களை யும் தெரிவித்துக் கொள் கிறோம்” என்று பெ.சண் முகம் குறிப்பிட்டுள்ளார்.