tamilnadu

மார்ச் 22-இல் பெரும் பொதுக்கூட்டம்

மார்ச் 22-இல் பெரும் பொதுக்கூட்டம்

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை

ஒன்றிய அரசின் தொகுதி  மறுசீரமைப்பு முயற்சிக்கு எதிராக மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மற்றும் கட்சித் தலைவர் கள் பங்கேற்கும் மாபெரும்  பொதுக்கூட்டம் நடைபெற வுள்ளது. இந்த முக்கியக் கூட்டத் தில் தெலுங்கானா முதல மைச்சர் ரேவந்த் ரெட்டி, முன்னாள் முதலமைச்சர் கே.டி.ராமராவ், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், கேரள முதல மைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட பல மாநிலத் தலைவர்கள் பங்கேற்பர். “தொகுதி மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தப் பட்டால், தமிழகத்தின் குரல்வளை முழுமையாக நசுக்கப்படும்” என்று  முதலமைச்சர் ஸ்டாலின்  ஏற்கனவே எச்சரித்து உள்ளார். மார்ச் 22 ஆம்  தேதி நடைபெறும் இந்த  கூட்டத்தில் மாநில உரிமை களைப் பாதுகாப்பதற்கான கூட்டு நடவடிக்கைகள் அறி விக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.