tamilnadu

img

வண்ணக்கதிர் 1

லஜபதிராயின் சனாதனச் சார்பும் பகத்சிங்கின் இலக்கிய அறச்சீற்றமும்!  

இலக்கியம் சமுதாயத்தை பிரதிபலிக்கிறது. வெறும் கண்ணாடி போல் அல்ல. பல பிம்பங்களையும் அதில் பார்க்க முடிகிறது. சில மாய பிம்பங்கள்; சில கூட்டி குறைத்துக் காட்டுபவை. அதை படைக்கும் இலக்கியவாதிகளுக்கும் அந்த சமுதாயத்தின் ஏதோ ஒரு பகுதியுடன் சார்புத் தன்மை இருக்கும். அதைப் பொறுத்து அந்த இலக்கியம் மக்கள் இலக்கியமாகவோ அல்லது ஆள்பவர்களின் இலக்கியமாகவோ இருக்கின்றது. இதில் இன்னும் ஒரு  சோகம் என்னவென்றால் முற்போக்காகத் தொடங்கி பிற்போக்காக முடிகின்ற இலக்கியவாதிகள் இருப்பார்கள். தனிப்பட்ட வாழ்வில் நடக்கின்ற துன்பங்களாலோ அல்லது அதிகாரம் வழங்குகின்ற பணம், பகட்டினாலோ இந்த பின்னடைவு ஏற்படலாம்.  இங்கிலாந்தில் 18-19 ஆம் நூற்றாண்டுகளில்

ஷெல்லி,பைரன், ராபர்ட் பிரௌனிங், வேர்ட்ஸ்வொர்த் போன்ற முற்போக்கான கவிஞர்கள் பலர் தோன்றினர். அதற்கு முந்தைய நூற்றாண்டுகளிலும் ஷேக்ஸ்பியர், மில்டன் போன்றவர்கள் இருந்தனர். ஷெல்லியின் சமகாலத்தவரான வேர்ட்ஸ்வொர்த் தனது முற்போக்கான பார்வையை கைவிட்டு ஆள்பவர் பக்கம் சாய்ந்ததை  ஷெல்லியும் ராபர்ட் பிரௌனிங்கும்  வருத்தத்துடனும் கோபத்துடனும் பாடுவதை தோழர் கிருஷ்ணமாச்சாரி தனது முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரையில்( மக்கள் போராட்டங்கள்- ஷெல்லியின் கண்ணோட்டம்) இவ்வாறு கூறுகிறார்.      வேர்ட்ஸ்வொர்த்துக்கு  ஷெல்லியின் கண்டனம் ‘வேர்ட்ஸ்வொர்த்தும் கால்ரிட்ஜும் பழமைவாத செல்வாக்கை செலுத்தினர். தனது பிற்கால வாழ்க்கையில், கால்ரிட்ஜ் தனது மனதை கவிதையிலிருந்து தத்துவத்திற்கு மாற்றிக் கொண்டு டோரியிசத்தின்(Toryism) கோட்பாடுகளை தோற்றுவித்தார். வேர்ட்ஸ்வொர்த்தும் (1770-1850) அரசியல் ஆர்வத்தை குறைத்துக் கொண்டே போனார். 1843இல் அவர் அரசவைக் கவிஞரானார். அவரது இந்தச் செயல் துரோகமாகப் பார்க்கப்பட்டது. ஷெல்லி இந்த துரோகத்தை கண்டனம் செய்தார்.   “குருட்டுத்தனமாக சண்டையிடும்   கூட்டத்திற்கு மேலாக   தஞ்சம் தரும்   ஒரு கற்கோட்டையாய் நீ நின்றிருந்தாய்.  ஏழ்மையை கவுரவிக்கும்   பாடலாய் உன் குரல் இசைத்தது.  அதில் உண்மையும் உரிமையும் பொதிந்திருந்தது.  இத்தனை தகுதி படைத்த நீ   இதுவரை இருந்தது போலில்லாமல் அழிந்து   என்னை துயரத்தில் ஆழ்த்துகிறாய்.”   ஒரு நண்பனின் பின்னடைவு கவிஞரை எந்த அளவு வருத்தம் அடையச் செய்தது என்பதை இந்த வரிகளில் பார்க்க முடிகிறது.  இதேபோல் ராபர்ட் பிரௌனிங் எனும் கவிஞர் வேர்ட்ஸ்வொர்த்தின் துரோகத்தை ‘தொலைந்து போன தலைவன்’ (the lost leader) எனும் பாடலில் கோபமும் துயரமும் கொப்பளிக்க எழுதியிருக்கிறார். வேர்ட்ஸ்வொர்த்தின் பெயரை அவர் குறிப்பிடவில்லை என்றாலும் அது அவரைத்தான் குறிக்கிறது என்பதை அனைவரும் அறிந்திருந்தனர்.  இந்த இலக்கிய நிகழ்வுப் போக்கை பகத்சிங் கையாண்டிருக்கிறார் என்கிற செய்தியை ‘காக்கை சிறகினிலே’ இதழில் தோழர் ஜோசஃப் குமார் தன்னுடய கட்டுரையில் பதிவு செய்கிறார். அவரது பதிவு ஏ.ஜி நூரணியின் ‘“The Trial of Bhagat Singh” என்பதை அடிப்படையாகக் கொண்டது.  லஜபதிராயின் பிறழ்வும்  பகத்சிங்கின் வெறுப்பும் ‘இலக்கியத்தில் மிகுந்த நாட்டம் கொண்டிருந்த பகத்சிங்கிற்கு இவ்விலக்கிய சர்ச்சை கூர்ந்து நோக்க வேண்டிய ஒன்றாயும் ஆராயத் தகுந்த ஒன்றாயும் அமைந்திருந்தது. இரு பெரும் ஆங்கிலக் கவிஞர்களிடையே எழுந்த இக்கருத்து மோதலை ,அவர் தான் லாலா லஜபதி ராயுடன் கொண்டிருந்த கருத்து மோதலோடு ஒப்பிட்டுப் பார்த்தார். பகத்சிங், லாலா லஜபதி ராய் மீது பெரும் மதிப்பு வைத்திருந்தார். ஆனால் பின்னர் அவர் சனாதன கருத்துகள் பக்கம் சாயத் தொடங்கியவுடன் கண்டனம் தெரிவிக்கிறார். லஜபதிராயிடம் தான் கண்ட தீவிர இந்து மதப் பற்று, அவர் வெறுக்கத்தக்க ஒன்றாய் மாறியது.  ‘மதம் என்பது ஒரு மனிதனின் தனிப்பட்ட பிரச்சனையாக மட்டுமே இருக்க முடியும். ஆனால் அதை யாராவது அரசியலில் அனுமதித்தால் ஒரு மிகப் பெரிய எதிரியாகக் கருதி அதனுடன் போராடி, அதை ஒழிக்க வேண்டும்’ என்றும் அவர் மேடைகளில் முழங்கினார். ....’மதப் பிரச்சனையும் அதற்கான மருந்தும்’ என்ற புத்தகமொன்றையும் எழுதினார். தனது சினத்தை வெளிப்படுத்த அவர் கையாண்ட முறை மிகுந்த வியப்புக்குரியது. கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்தை தாக்கி, கவிஞர் ராபர்ட் பிரௌனிங் எழுதிய ‘காணாமற் போன தலைவர்’ என்ற ஆங்கிலக் கவிதையை ஒரு சிற்றேடாக வெளியிட்டார். அட்டையில் லாலாலஜபதி ராயின் படத்தையும் பிரசுரித்தார்! தனது மிகத் தீவிர விடுதலைப் போராட்ட நடவடிக்கைகளுக்கு இடையே அவர் எவ்வாறு இலக்கிய நயம் துய்த்தார் என்பது நம்மை வியப்புக் கடலில் ஆழ்த்துகிறது.......’  தான் மிகவும் நம்பிக்கை வைத்திருந்த தலைவர் தொடர்ச்சி அடுத்தப் பக்கம்

செங்கொடி நிழலில் சமூக பண்பாட்டு மாற்றங்கள்

“எது நடக்கக்கூடாதுன்னு நினைச்சோமோ அது நடக்குது. நேத்து வரைக்கும் இடுப்புல துண்டைக் கட்டிக்கிட்டுப் போன சேரிக்காரனுங்க இப்ப தோள்ல போட்டுக்கிட்டு வர்றானுங்க.”

1950களிலும் 60களிலும் இந்தப் பேச்சைத்  தமிழ்நாட்டின் பல ஊர்களும் கேட்டி ருக்கின்றன. கேரளம், ஆந்திரம், வங்கம் என வேறு பல மாநிலங்களிலும் பெரும்பாலான ஊர்களில் இப்படிப் பேசப்பட்டிருக்கிறது. ஊர்களின் வயல்களில் விவசாயக் கூலித் தொழிலாளர்களாக இறங்கி உழைப்பதற்கு அனுமதிக்கப்பட்ட, ஆனால் சேரிகளிலிருந்து ஊரின் தெருக்களில் இறங்கி நடப்பதற்கு அனுமதிக்கப்படாத மனிதர்கள் இருந்தார்கள். வயல்களின் உரிமையாளர்கள் மட்டுமல்லாமல் மேட்டுத்  தெருக்களில் வாழும் யாரைக் கண்டாலும் கக்கத்திலிருந்த துண்டை எடுத்து இடுப்பில்  கட்டிக்கொண்டு குனிந்து செல்ல வேண்டி யவர்களாக அவர்கள் இருந்தார்கள்.  அந்த  மக்கள் துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு அந்தத் தெருக்களில் ஏறி நடக்கத் தொடங்கியது சாதாரண மாற்றமல்ல.  ஆகவேதான் அந்த ஊர்களிலெல்லாம் மேலே பார்த்த பேச்சு ஒலித்தது. இந்தப் பேச்சு  ஒலிக்காத ஊர்கள் இருந்திருக்கும் என்றால்,  அவை கம்யூனிஸ்ட் இயக்கம் வேரூன்றாத பகுதிகளாகத்தான் இருக்கும். இரட்டைத் தண்டவாளம் இந்தியச் சமுதாயம் என்ற தொடர்வண்டி  ஓடுவதற்கான பாதையைத் தாங்கியி ருக்கும் அடித்தளமாக இருந்து வந்திருப்பது  “உழைப்பை வழங்குவோர்–அதைச் சுரண்டு வோர்” என்ற வர்க்கக் கட்டுமானம்தான்.

அந்தப் பாதையின் இரண்டு தண்ட வாளங்களில் ஒன்று, சாதிப் பாகுபாடு. இன்னொன்று மாதர்தமை இழிவு செய்யும்  ஆணாதிக்கக் கோட்பாடு. சமத்துவத்துக் கான மாற்றுப் பாதையில் சமுதாய வண்டி செல்வதற்குத் தோதாக, அந்த இரண்டு தண்டவாளங்களையும் பெயர்த்தெடுக்கும் வரலாற்று முயற்சி நடந்துகொண்டே இருக்  கிறது. அதன் ஒரு கட்டமாக அவற்றின் மீது விழுந்த சம்மட்டி அடிகள் எளிதானவை அல்ல. இடுப்பைச் சுற்றியிருந்த துண்டு தோளுக்கு ஏறியது அப்படிப்பட்ட ஒரு சம் மட்டி அடிதான். அதுவொரு மாறிய காட்சி. அப்படி மாற்றியது கம்யூனிஸ்ட் கட்சி.  நாடு தழுவிய அளவில் டாக்டர் அம்பேத்கர் முனைந்தெடுத்த இயக்கம், தமிழகத்தில் அயோத்திதாசர் முதல் பெரியார் வளர்த்தெ டுத்த இயக்கம் வரையில் அந்தச் சம்மட்டி யைக் கையில் எடுக்க வைத்திருக்கின்றன. அதேவேளையில், கருத்துப் பரப்பலைச் செய்துகொண்டே களத்திலும் இறங்கி, சங்கம் அமைப்பதில் தொடங்கி, நியாயக் கோரிக்கைகளை எழுப்பி  அசைவுக்கான போராட்டங்களை நடத்தியது, நடத்திக் கொண்டே இருப்பது கம்யூனிஸ்ட் இயக்கம். பெரிய கோவில்களில் கூட ஒதுக்கப் பட்ட மக்கள் நுழைந்து வழிபடுவது சாத்திய மாகிவிட்டது, ஆனால் கிராமங்களின் சிறிய  கோவில்களில் இன்னமும் அசாத்தியமாக  இருக்கிறது.

அதையும் சாத்தியமாக்கு வதற்கான போராட்டத்தை, இன்றைய சூழ லில் வீரியத்தோடு நடத்திக்கொண்டிருக்கிற நாடுதழுவிய இயக்கம் என்றால் அது இந்திய  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மட்டுமே என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியும். உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் இடிப்பு, தேர்ந்தெடுக்கப்படும் தலித் சமூ கத் தலைவர்கள் ஊராட்சிமன்ற இருக்கை களில் அமர்ந்து பணியாற்றுகிற உரிமை  நிலைநாட்டல், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதற்கான சட்டச் செயலாக்கத் திற்குத் துணைநிற்றல், ஒரு காதல் இணை எந்தச் சாதியினரானாலும் அவர்களைப் பாது காப்பதற்கான சாதி ஆணவக்கொலை தடுப்புச் சட்டத்திற்கு வலியுறுத்தல் என்று  தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு வழிகாட்டி யாகக் களமாடிக்கொண்டே இருக்கிறது மார்க்சிஸ்ட் கட்சி. பாரினில் பெண்கள் இரட்டைத் தண்டவாளம்தான் என்று நிறுவிக்காட்டுவதாக, கேரளத்தில் ஒதுக்கப் பட்ட சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் மார்க்கச்சை அணியக்கூடாது என்ற, ஆண் வக்கிரத்தின் அப்பட்டமான வெளிப்பாடாக விதி இருந்து வந்தது. கம்யூனிஸ்ட் இயக் கத்தின் முன்னெடுப்பால், பெண்ணின் சுய மரியாதை எழுச்சி, தோள் சீலைப் போராட்ட மாக உருவெடுத்தது. அந்த வக்கிரம் பழைய  கதையாக மாறியது. வரதட்சனைத் தடைச் சட்டம் வந்ததற்கு மையமான காரணமாக இருந்ததும், நடைமுறையில் கண்டும் காணா மலும் வரதட்சனை தொடர்கிற நிலையில் அதன் கொடுமைகளைத் தடுக்க அந்தச் சட்டத்தை ஆயுதமாக உயர்த்துவதில் முன்னணியில் இருப்பதும் கம்யூனிஸ்ட் தோழர்களே. சென்னையில், ஒரு பெண் குடும்பத்தில் பல்வேறு கொடுமைகளையும் அவமதிப்பு களையும் சந்தித்தவராகத் தனித்து வாழ முடிவு செய்தார். அதன் பிறகும் கூட, உற வினர்களின் முகச்சுளிப்புகளுக்கும், “நீதான்  பொறுப்பா இருந்திருக்கனும்” என்பது  போன்ற விமர்சனங்களுக்கும் ஆளானார்.  பெற்றோரின் ஒத்துழைப்பும் கிடைக்காத  நிலையில், ஒத்துழைக்க முன்வந்த சில  ஆண்கள் அவருடைய உடலை விலை யாகக் கேட்டார்கள். வெறுத்துப்போய் தற்கொலைக்கு முயன்றவரைத் தடுத்து நிறுத்திய சிநேகிதி, நேராக மாதர் சங்க அலு வலகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே  சங்கப் பொறுப்பாளர்கள் சிறந்த உளவியல் வல்லுநர்களாகவும் மாறி, தற்கொலைச் சிந்தனையிலிருந்து விடுவித்து, தங்களின் உறவாக அவரை வரித்துக்கொண்டார்கள். இன்று ஒரு தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டே சங்கத்திற்காகவும் பணி யாற்றுகிற அவர், தனித்து வாழும் பல  பெண்களுக்கு அற வலிமையும் வழிகாட்ட லும் வழங்குகிறவராக இருக்கிறார். இப்படி  நிறையப் பெண்கள். எந்த ஊரானாலும், ஒரு பெண் கடுமையாகப் பாதிக்கப்படுகிறபோது “இங்கே மாதர் சங்க ஆட்கள் இருப்பாங்க, போய்ப்பாருங்க,” என்று மற்றவர்கள் சொல்  கிற அளவுக்கு அடையாளம் கிடைத்தி ருக்கிறது. கலாச்சாரப் பெருமையின் பெய ரால் பெண்ணின் மீது சுமத்தப்படும் பல  சடங்குச் சுமைகளையும் அணிவிக்கப்படும் அடையாளங்களையும் அப்புறப்படுத்தவும், பாலின சமத்துவக் கனவை முழுமையாக நனவாக்கவும் போராடிக்கொண்டே இருக்கும் மாதர் அமைப்புக்கு மார்க்சிஸ்ட் கட்சி பின்புலமாகத் திகழ்கிறது. பெண் களின் சுயத்தை நிலைநாட்டுவதில் முக்கி யப் பங்களித்தது “சம வேலைக்கு சம ஊதி யம்” என்ற முழக்கம்.

அதை உருவாக்கி யதும், நடைமுறை உண்மையாக மாற்றிய தும் கம்யூனிஸ்ட் இயக்கம். வர்க்கக் கடமை தொழிலாளர்களுக்கும் அலுவலர்களுக்  கும் ஆசிரியர்களுக்கும் அரசு ஊழி யர்களுக்கும் பல்வேறு சங்கங்கள், அமைப்பு கள் இருக்கின்றன. அவர்களின் ஊதியம்,  பணிப் பாதுகாப்பு, வேலை நேரம், மருத்துவ  நலன் ஆகிய நியாயமான கோரிக்கை களுக்காக அந்த அமைப்புகள் செயல்படு கின்றன. அவற்றைத் தாண்டி, ஒட்டுமொத்த சமுதாயத்தை விடுதலை செய்கிற மகத் தான வர்க்கக் கடமை இருப்பதை நினை வூட்டிக்கொண்டே இருப்பது, அந்த வர லாற்றுத் திருப்பத்திற்காக அணி திரட்டிக் கொண்டே இருப்பது கம்யூனிஸ்ட் இயக்  கம். கம்யூனிஸ்ட்டுகளின் உறுதியான ஆத ரவால்தான், போராட்டங்களை ஒடுக்கு கிற நீதிமன்ற ஆணைகள் உட்பட அனைத் தையும் எதிர்கொண்டு, அடக்குமுறைகளை உதிர்த்துத் தள்ளி, நிர்வாகங்களும் அதிகார  வர்க்கத்தினரும் தங்களோடு உட்கார்ந்து  பேச வைத்திருக்கிறார்கள் கரத்தாலும் கருத்  தாலும் உழைக்கிற பாட்டாளிகள். இது  அவர்களுடைய சொந்த முன்னேற்றங்க ளோடு நில்லாமல், நாட்டின் வளர்ச்சியில், சமுதாயத்தின் முன்னேற்றத்தில் பங்க ளிக்கிறவர்கள் என்ற இடத்தை உழைப்பாளி கள் பெற வைத்திருக்கிறது.  இத்தகைய சிந்தனைகளை முன்னெ டுத்துச் செல்வதில் கலைகளுக்கும் இலக்கி யத்திற்கும் மிகப் பெரும் பங்கு உண்டு.  கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சிந்தனைகளா லும் செயல்பாடுகளாலும் ஈர்க்கப்பட்ட எழுத்  தாளர்களும் கலைஞர்களும் தங்களுடைய படைப்புகளில் அவற்றைத் தங்களுக்கே உரிய தனித்துவ அழகியலோடு வெளிப் படுத்துகிறார்கள். அது, பொது வெளியில் இருக்கிற மக்களிடையே தாக்கம் ஏற்படுத்து கிறது.

இயக்கம் சார்ந்தவர்கள் மட்டுமல்லா மல், தமக்கு எவ்வித இயக்க வண்ணமும் பூசிக்கொள்ள விரும்பவில்லை என்று கூறி டும் சிந்தனையாளர்களும், படைப்பாக்கம்  என்று வருகிறபோது, சமூக உண்மை களைச் சித்தரிப்பது என்று வருகிறபோது,  இயல்பாகவே அந்தச் சித்தரிப்புகளில்  சிவப்பு வண்ணம் பூத்துவிடுகிறது. தேசிய  விருதுகள் அறிவிக்கப்படுகிறபோதெல் லாம், இடதுசாரிகளுக்கே விருதுகள் கிடைப்  பது எப்படி என்று ஒரு பகுதியினர் கூச்சல் போடுவதைக் கேட்கலாம். பின்னர் அது வெறும் முனகலாக முடிந்து போவதையும் காணலாம். இந்தியாவின் கம்யூனிஸ்ட் இயக்கம் விடுதலைக்குக் கால் நூற்றாண்டுக்கு முன்  பாகத் தொடங்கியதைப் போலவே, இலக்கி யத்திலும் அக்காலத்தில் சிவப்புச் சிந்த னைகளை, சமத்துவக் கனவுகளை, உரிமை உணர்வுகளை விதைத்த, சமூகத்தின் சமத்து வமற்ற நிலைமைகள் குறித்த குற்ற வுணர்வை ஏற்படுத்தியவர்கள் பேனா ஆயு தம் ஏந்திப் புறப்பட்டார்கள். அவை நாட கங்களாகின. திரைப்படங்களாகவும் பரிண தொடர்ச்சி அடுத்த பக்கம்