வீடுகள்தோறும் கழிவறை கட்டித் தர வலியுறுத்தல் கும்பகோணம்
, மார்ச் 18- கும்பகோணம் மாநகரம் தாராசுரத்தில், சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சிறப்பு பேரவை திங்களன்று நடை பெற்றது. பேரவைக்கு கே.லலிதா தலைமை வகித்தார். மாதர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் ஆர். கலைச்செல்வி சிறப்புரையாற்றினார். கும்பகோணம் மாநகராட்சி சிபிஎம் மாமன்ற உறுப்பினர் எ.செல்வம், மாற்றுத்திற னாளிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் பழ. அன்புமணி, மாநகர தலைவர் ஏ.எஸ்.சுமதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பட்ட தாராசுரம் மிஷின் தெருவில் சுகாதாரக் கேட்டை சீர்படுத்தி, சுகாதார வளாகம் ஏற்படுத்த வேண்டும். தாராசுரம் பகுதியில் வீட்டுக்கு ஒரு கழிவறை கட்டித் தந்து பாதாளச் சாக் கடையை விரிவுபடுத்த வேண்டும். இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரை மாதர் சங்கம் சார்பில் சந்தித்து முறை யிடுவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வயல் வேலைக்குச் சென்ற பெண் பாம்பு கடித்து உயிரிழப்பு
திருவாரூர், மார்ச் 18 - திருவாரூர் அருகே நமச்சிவாயபுரம் மேலத் தெருவில் வயல் வேலைக்குச் சென்ற பெண் தொழிலாளி தேவி (40) பாம்பு கடித்து காலமானார். அவரின் இல்லத்திற்கு சென்று சிபிஎம் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். திருவாரூர் ஒன்றியம், பின்னவாசல் ஊராட்சி நமச்சிவாயபுரம் மேலத்தெருவில் வசிக்கும் விவசாய கூலித் தொழிலாளி சிவாஜி. இவரது மனைவி தேவி திங்க ளன்று மாலை அருகில் உள்ள வயலுக்கு கூலி வேலைக்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராமல் தேவியை பாம்பு கடித்து விட்டது. உடனே அங்கிருந்த வர்கள் அருகில் உள்ள கோமல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்த மருத்துவர்கள், அவரை உடனடி யாக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தர். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட நிலையில், சிகிச்சை பலனின்றி தேவி காலமானார். பாம்பு கடித்து இறந்து போன தேவிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர்கள் ஏழாம் மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கின்றனர். விவசாய பெண் தொழிலாளி பாம்பு கடித்து இறந்த செய்தியறிந்து, நேரில் சென்ற சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சுந்தரமூர்த்தி, திருவாரூர் ஒன்றிய செய லாளர் ஆர்.எஸ். சுந்தரய்யா, மூத்த தோழர் என்.இடும்பை யன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தியாகராஜன் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளை உறுப்பி னர்கள் அஞ்சலி செலுத்தினர்.
ரூ.22 லட்சம் மோசடி: நிதி நிறுவன உரிமையாளர் கைது தஞ்சாவூர்
, மார்ச் 18 - தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே ஆர்சுத்திப் பட்டை சேர்ந்தவர் ராஜசேகர் (54). இவர் சூரியா பேங்கர்ஸ் என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வந்தார். இதில், நார்த்தேவன்குடிக்காட்டு பகுதியைச் சேர்ந்த, கட்டிட காண்டிராக்ட் வேலை பார்த்து வரும் ராஜேந்திரன் என்ப வர், தான் சேமித்து வைத்திருந்த ரூ.28.75 லட்சம் பணத்தை, ராஜசேகர் நடத்தி வந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். இந்நிலையில், அவசரத் தேவைக்காக, ராஜேந்திரன் தனது முதலீடு பணத்தில் இருந்து, 6.75 லட்சம் ரூபாயை எடுத்து விட்டார். பிறகு, கடந்த 2024 ஆகஸ்ட் 18 ஆம் தேதி, ராஜேந்திரன் நிதி நிறுவனத்தில் உள்ள மீதம் 22 லட்சம் ரூபாயை ராஜசேகரிடம் கேட்டுள்ளார். அப்போது ராஜசேகர் பணத்தை தர மறுத்து மிரட்டியுள்ளார். தொடர்ந்து பலமுறை ராஜேந்திரன் பணத்தை கேட்டும், ராஜசேகர் தரவில்லை. இதுகுறித்து, கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி, ராஜேந்திரன், தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார். இந்த மனு மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதன்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை யினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, கரூரில் மறைந்திருந்த ராஜசேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.