வங்கதேசத்தில் ஐபிஎல் போட்டிகளுக்குத் தடை கொல்கத்தா அணியில் இருந்து
வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபி ஷூர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டதைத் தொ டர்ந்து, ஐபிஎல் போட்டிகளை அந் நாட்டில் ஒளிபரப்புவதற்கும், இணை யத்தில் ஸ்ட்ரீமிங் செய்வதற்கும் வங்க தேச அரசு தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,”மார்ச் 26ஆம் தேதி முதல் நடைபெறவிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான கொல் கத்தா அணியிலிருந்து வங்கதேச நட்சத் திர வீரர் முஸ்தாபிஷூர் ரஹ்மானை விலக்குவது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடமி ருந்து (பிசிசிஐ) உத்தரவு வந்துள்ளது. பிசிசிஐ-யின் இத்தகைய முடிவுக்குப் பின்னால் எந்தவொரு நியாயமான காரண மும் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால் மறுஅறிவிப்பு வரும் வரை, ஐபிஎல் போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒளிபரப்பு செய்வதை நிறுத்தும்படி அறிவுறுத்தல்களின்படி கோரிக்கை விடுக்கப்படுகிறது” என அதில் கூறப்பட்டுள்ளது.
