2025-2026 பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
மொத்த வருவாய் ரூ.3.31 லட்சம் கோடி யாக இருக்கும். இதில், சொந்த வரி வரு வாய் ரூ.2.20 லட்சம் கோடியாக உயரும் என மதிப்பீடு. வரியில்லாத வருவாயாக ரூ.28,818 கோடி கிடைக்கும் என மதிப்பீடு. ஒன்றிய அரசிடம் இருந்து கிடைக்கும் நிதிப் பங்கீடு ரூ.58.021 கோடியாக மதிப்பீடு. ஒன்றிய அரசிடம் இருந்து கிடைக்கும் மானியங்கள் வரும் நிதியாண்டில் ரூ.23,834 கோடியாக இருக்கும் என மதிப்பீடு. செலவினம் மொத்த செலவினம் ரூ.373 லட்சம் கோடியாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பொது கடன் வட்டி செலவினம் ரூ.70,753 கோடியாக இருக்கும். மானியங்கள் உள்ளிட்ட செலவினங்கள் ரூ.1.53 லட்சம் கோடியாகவும், ஓய்வூதியம் வகை செலவினமாக ரூ. 41,290 கோடி இருக்கும் என மதிப்பீடு மூலதனக் கணக்கு 2024-25 நிதியாண்டில் மூலதனச் செலவுகளுக்காக ரூ.46, 766 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், வரும் நிதியாண்டில் இது ரூ.57,230 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வருவாய் பற்றாக்குறை வரும் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.41,634 கோடியாக இருக்கும் என மதிப்பீடு. துறை வாரியாக நிதி ஒதுக்கீடு உயர் கல்வித்துறைக்கு ரூ.8,494 கோடி பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.46,767 கோடி நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு ரூ.25 ஆயிரம் கோடி இளைஞர் நலன், விளையாட்டுத் துறைக்கு ரூ.572 கோடி தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு ரூ.1,975 கோடி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.21,906 கோடி ஒதுக்கீடு. முக்கிய திட்டங்கள் புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டம் மூன்றாம் பாலி னத்தவர்க்கும் விரிவுபடுத்தப்படும். 10 இடங்களில் ரூ.77 கோடியில் தோழி விடுதி அமைக்கப்படும். 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.56 கோடியில் தரம் உயர்த்தப்படும். 2,676 பள்ளிகளில் வகுப்பறைகள் ரூ.65 கோடியில் தரம் உயர்த்தப்படும். மூத்த குடிமக்கள் பராமரிப்புக்கு அன்புசோலை மையங்கள் அமைக்கப்படும். முதல்வரின் காலை உணவு திட்டம், நகரப் பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்ய ரூ.600 கோடி ஒதுக்கீடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படும். அரசு பல்கலைக் கழகங்களில் ஆராய்ச்சி மேம்பாட்டிற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு. ஆசியாவிலேயே தலைசிறந்த பல்கலைக்கழகமாக அண்ணா பல்கலைக்கழகம் மாற்றப்படும். இதற்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு. ட்ரோன் தொடர்பாக புதிய பட்டய படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும். தமிழகத்தில் அனைத்து வகை அரசு கல்லூரிகளின் மேம்பாட்டுக்காக ரூ.300 கோடி ஒதுக்கீடு 8 மாவட்டங்களில் அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும். 2025-26 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் மாணவர்களுக்கு ரூ.2500 கோடி கல்விக் கடன் வழங்கப்படும். காஞ்சிபுரம் புற்றுநோய் மையத்தை மேம்படுத்த 120 கோடி ரூபாய் ஒதுக்கீடு. இராமதாதபுரத்தில் நாவாய் அருட்காட்சியகம் அமைக்க ரூ.21 கோடி ஒதுக்கீடு கருணாநிதி நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு அனைத்து நகர்ப்புறங்களிலும் சாலைகளை மேம்படுத்த ரூ.3,700 கோடி ஒதுக்கீடு முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் 6,100 கி.மீ., நீள சாலைகள் மேம்படுத்தப்படும்; இதற்காக ரூ.2,200 கோடி ஒதுக்கீடு அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.1,087 கோடி ஒதுக்கீடு சீரமைக்க இயலாத வீடுகளுக்குப் பதிலாகப் புதிய வீடுகள் கட்டி தரப்படும். ரூ.600 கோடியில் 25,000 வீடுகள் கட்டப்படும். ரூ.88 கோடியில் சென்னை பெருநகரப் பகுதிகளில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள் அமைக்கப்படும். ரூ.675 கோடியில் 40 ஆண்டுகள் பழமையான 102 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மறுசீரமைப்பு செய்யப்படும். ரூ.400 கோடியில் திருச்சி, மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாநகராட்சிகளில் நதிக்கரை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும். சென்னையில் சீராகக் குடிநீர் விநியோகித்திட முதன்மைச் சுற்றுக் குழாய்த் திட்டத்திற்கு ரூ.2,423 கோடி ஒதுக்கீடு. 7 மாவட்டங்களில் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கு ரூ.6,668 கோடி ஒதுக்கீடு. மகளிர் விடியல் பயண திட்டத்திற்கு ரூ.3,600 கோடி ஒதுக்கீடு. 10 ஆயிரம் பெண்கள் சுய உதவிக்குழு அமைக்கப்படும். இதற்கு ரூ.37 ஆயிரம் கோடி வழங்கிட இலக்கு சென்னை, கோவை, மதுரையில் தலா 1,000 மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.275 கோடியில் மாணவியர் விடுதிகள் அமைக்கப்படும். 10 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 2.5 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்படும் கலைஞர் கைவினை திட்டத்தில் 19,000 கைவினைக் கலை ஞர்கள் பயன்பெறும் வகையில் 74 கோடி ரூபாய் மானிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.