கேரள உள்ளாட்சித் தேர்தல் இன்று வாக்கு எண்ணிக்கை
கேரளாவில் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. முதல் கட்டமாக டிசம்பர் 9 அன்று திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி ஆகிய 7 மாவட்டங்களில் நடைபெற்றது. முதல் கட்டத்தில் 70.91% வாக்குகள் பதிவாகி இருந்தன. தொடர்ந்து டிச., 11 அன்று நடைபெற்ற 2ஆவது கட்ட தேர்தல் திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர், பாலக்காடு, வயநாடு, மலப்புரம், காசர்கோடு ஆகிய 7 மாவட்டங்களில் நடைபெற்றது. 2ஆம் கட்டத்தில் 76.08% வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், பதிவான வாக்குகள் சனியன்று எண்ணப்படுகின்றன. காலை 7 மணிக்கு மேல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில், மாலைக்குள் இறுதி முடிவு தெரியவரும் என செய்திகள் வெளியாகியுள்ளன. வடக்கு கேரளாவிலும் வாக்குப்பதிவு குறைந்தது கேரளத்தில் உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம் கட்டத்திலும் வாக்குப்பதிவு குறைந்தது. வியாழனன்று (டிச.11) வாக்குப்பதிவு நடைபெற்ற திருச்சூர் முதல் காசர்கோடு வரையிலான மாவட்டங்களில் 76.08% வாக்கு பதிவாகியுள்ளது. 2020இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இந்த மாவட்டங்களில் சராசரி வாக்குப்பதிவு 77.9% ஆக இருந்தது. மாவட்டங்களும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு சதவீதமும் (2020 வாக்குப்பதிவு அடைப்புக்குறிக்குள்): திருச்சூர் – 72.46 (75.20), பாலக்காடு – 76.27 (78.13), மலப்புரம் – 77.43 (78.91), கோழிக்கோடு – 77.26 (79.20), வயநாடு – 78.3 (79.47), கண்ணூர் – 76.77 (77.13), காசர்கோடு – 74.86 (77.25) மாநகராட்சி (2020 வாக்குப்பதிவு அடைப்புக்குறிக்குள்) : திருச்சூர் – 62.45 (71.88), கோழிக் கோடு – 69.55 (74.70), கண்ணூர் – 70.33 (74.75) முதல் கட்ட வாக்குப்பதிவு : உள்ளாட்சித் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு 70.91% ஆகும். திரு வனந்தபுரம் முதல் எர்ணாகுளம் வரை யிலான 7 மாவட்டங்களில் 94,10,450 பேர் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தி னர். 2020ஆம் ஆண்டில், இந்த7 மாவட்டங்களிலும் சராசரி வாக்குப்பதிவு 73.82% ஆக இருந்தது. இந்த முறை, 7 மாவட்டங்களிலும் வாக்குப்பதிவு குறைந்துள்ளது. அதிகபட்ச வாக்குப் பதிவு எர்ணாகுளம் மாவட்டத்தில், 74.57% ஆக இருந்தது. குறைந்தபட்ச வாக்குப்பதிவு பத்தனம்திட்டாவில் 66.78 % ஆக இருந்தது.
