tamilnadu

img

3000 தொழில்முனைவோர் பங்கேற்ற கேரள முதலீட்டாளர் மாநாடு

3000 தொழில்முனைவோர் பங்கேற்ற கேரள முதலீட்டாளர் மாநாடு

கடந்த பிப்ரவரி 21-22 தேதிகளில் உலகமே கொச்சியில் திரண்டது, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இன்வெஸ்ட் கேரளா உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டுக்கு 26 வெளிநாடுகளைச் சேர்ந்த தொழில்முனைவோர் உட்பட சுமார் 3,000 தொழில்முனைவோர் பங்கேற்கின்றனர். ஜெர்மனி, வியட்நாம், நார்வே, ஆஸ்திரேலியா, மலேசியா, பிரான்ஸ் ஆகியவை இன்வெஸ்ட் கேரளாவின் கூட்டாளி நாடுகளாயின.  மத்திய அமைச்சர்கள், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் அமைச்சர்கள் மற்றும் தொழில் மற்றும் வர்த்தகத் தலைவர்கள் கலந்து கொண்ட விழாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் உச்சிமாநாட்டைத் தொடங்கி வைத்தார். தொழில்துறை அமைச்சர் பி. ராஜீவ் தலைமை தாங்கினார். இம்மாநாட்டில் கேரளத்தின் தொழில்துறை வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையைக் குறிக்கும். சிறப்பு கூட்டங்கள், வணிக அமர்வுகள் மற்றும் விளக்கக்காட்சிகள் நடைபெற்றன.  ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி காணொலி செய்தி மூலம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அப்போது அவர், கேரளாவில் ரூ.20,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சாலைத் திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. 60,000 கோடி மதிப்புள்ள திட்டங்கள் முன்னேறி வருவதாக கட்காரி கூறினார். மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி, பங்கேற்றனர்.  ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் அப்துல்லா பின் துக் அல்-மரி, பஹ்ரைன் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் அப்துல்லா பின் அடெல் பக்ரு உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் ரூ.1.52 லட்சம் கோடிக்கான முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஏற்பட்டது. அவற்றை செயல்படுத்துவதற்கான குழுவையும் கேரள அரசு நியமித்துள்ளது.