அநீதியான தொகுதி மறுவரையறை எதிர்ப்புக் கூட்டம் கேரள முதல்வருக்கு அழைப்பு
திருவனந்தபுரம், மார்ச் 14 - தொகுதி மறுவரையறை காரணமாக பாதிக்கப்படும் மாநில முதல்வர்கள் மற்றும் முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ளார். சென்னையில் மார்ச் 22 அன்று நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற் கும் தலைவர்களுக்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சார்பில் தமிழக அமைச்சர்கள் - நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகின்றனர். ஏற்கெனவே, கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோருக்கு தமிழக அமைச்சர்கள் - நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று அழைப்பு விடுத்தனர். இந்நிலையில், கூட்டு நட வடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்கு மாறு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக, பினராயி விஜயனை, தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனை வர் பி.டி.ஆர். பழனிவேல் தியாக ராஜன், தென் சென்னை எம்.பி.தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகி யோர் வெள்ளிக்கிழமையன்று திருவனந்தபுரத்தில் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கேரள மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன் மாஸ்டரையும், அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தமிழச்சி தங்கப் பாண்டியன் ஆகியோர் சந்தித்து, கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டம் தொடர்பான அழைப்பை வழங்கினர்.