70 வயதை கடந்தவர்களுக்கு10 விழுக்காடு கூடுதல் ஓய்வூதியம்கடலூரில் மூத்த குடிமக்கள் ஆர்ப்பாட்டம்
70 வயதைக் கடந்த ஓய்வு பெற்றவர்க ளுக்கு 10 விழுக்காடு கூடுதல் பென்சன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ச னர்கள் கூட்டமைப்பு சார்பில் கடலூர் பழைய ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பழைய பென்சன் திட்டத்தை தொடர வேண்டும், குறைந்தபட்ச பென்சன் ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டம் காசில்லா மருத்துவம் உறுதிப்படுத்திட வேண்டும், 20 ஆண்டு பணிக்கு முழு ஓய்வூதியம் வழங்க வேண்டும், கம்யூடேசன் பிடித்தம் 12 ஆண்டு களாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ச.சிவராமன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் கு.ராதாகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் சி.பக்கிரி, துணை செயலாளர் தி.விவேகானந்தன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சி.ராமசாமி தொடக்க உரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் குடியிருப் போர் சங்க கூட்டமைப்பின் சிறப்பு தலை வர் எம்.மருதவாணன், வங்கி ஓய்வூதி யர்கள் சங்க தலைவர் வி.ரமணி, ஓய்வு பெற்ற ஊதிய சங்கத்தின் மாவட்ட செய லாளர் என். காசிநாதன், மாநில தலைவர் டி.புருஷோத்தமன் ஆகியோர் பங்கேற்று பேசினர். நிறைவாக மாநகரத் தலைவர் நா. பக்கிரி நன்றி கூறினார்.