tamilnadu

கீழடி அகழாய்வு பொருட்கள் கண்காட்சியகம்...

தமிழ் வளர்ச்சி - பண்பாட்டுத்துறை அமைச்சர் ம.பா.பாண்டியராஜன், தொல்லியல் துறை இயக்குநரும் மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியருமான த.உதயச்சந்திரன் ஆகியோர் ஆய்வுக்கு உறுதுணையாக இருந்து ஊக்கம
ளித்து வருகின்றனர். 

கீழடி ஐந்தாம்கட்ட அகழாய்வை வந்து பார்வையிட்டபோது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கூறி அருங்காட்சியகம் அமைக்கப்படும் எனவும் உறுதியளித்திருந்தனர்.

தற்காலிக கண்காட்சியகம்
இந்த நிலையில் கீழடியில் கிடைத்த பொருட்களைக் கொண்டு தற்காலிக கண்காட்சியகம் மதுரை உலகத் தமிழ்ச் சங்க முதலாவதுதளத்தில் இரண்டு அறைகளில் அமைக்கப்பட்டுள்ளன.  மக்கள் பார்வைக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி மூலம் கீழடி கண்காட்சியகத்தை  திறந்து வைத்தார். அப்போது அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், மா.பா.பாண்டியராஜன், பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.மதுரையில் நடைபெற்ற தொடக்க நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் வினய், தொல்லியல் துறை அதிகாரி சிவானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

உரிய பாதுகாப்பு தேவை
ஐந்தாம் கட்ட அகழ்வாய்வில் கண்டு பிடிக்கப்பட்ட சில முக்கிய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பானைகள்,  ஆட்டக்காய்கள், பகடைக்காய்,  தக்கிளி,  எலும்பு முனைகள் போன்ற நுண்ணியப் பொருட்கள் போதிய பாதுகாப்புடன் வைக்கப்பட வேண்டும்.குறிப்பாக கண்காணிப்புக் கேமிரா பொருத்தப்படவில்லை. பொருட்களைப் பாதுகாப்பதற்கு போதுமான  ஏற்பாடுகள் இல்லை. இந்தவிஷயத்தில் மதுரை மாவட்ட நிர்வாகம், தொல்லியல் துறை கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். பார்வையாளர்களுக்கு விளக்கமளிக்க ஊழியர்கள் நியமிக்க வேண்டும்.  அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்களின் 3-டி (முப்பரிமாண)  காணொலிக் காட்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்கண்முன்னே பொருட்களை தொட்டுப் பார்ப்பது போன்ற ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.