tamilnadu

img

பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக காஷ்மீரிகள் ஒன்றுபட்டு நிற்கிறார்கள்!

பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக காஷ்மீரிகள் ஒன்றுபட்டு நிற்கிறார்கள்!'

அப்பாவிகளைக் கொல்ல நாகரிக சமூகத்தில் இடமில்லை

ஸ்ரீநகர், ஏப். 24 - பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக காஷ்மீரிகள் நாட்டுடன் ஒன்றுபட்டு நிற்பதாகவும், மத அல்லது வகுப்புவாத அடிப்படையில் பிரித்தாளும் முயற்சியை அனுமதிக்க முடியாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், ஜம்மு - காஷ்மீரின் குல்காம் தொகுதி எம்எல்ஏ-வுமான முகமது யூசுப் தாரிகாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: இந்த கொடூரமான செயலுக்கு எதிராக காஷ்மீரில் பெரும் அதிருப்தி யும் துயரமும் நிலவுகிறது. பயங்கர வாதத்திற்கு மதமோ, நியாயமோ இல்லை. காஷ்மீர் மக்களாகிய நாங்கள், முழுமையாக நாட்டுடன் ஒன்று பட்டு நிற்கிறோம், துக்கத்திலும் அனு தாபத்திலும் ஒன்றுபட்டுள்ளோம். இந்தத் தாக்குதல்கள் நமது ஒட்டுமொத்த மனிதகுலத்தின் மீதான தாக்குதல், மத அல்லது வகுப்புவாத அடிப்படையில் நம்மைப் பிரிப்பதற்கு அனுமதிக்க முடியாது. அனந்த்நாக்கைச் சேர்ந்த உள்ளூர் குதிரை சவாரி வீரரின் உயிர் உட்பட 28 உயிர்களைக் கொன்ற பஹல்காமின் பைசரனில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல், ஜம்மு - காஷ்மீர் முழுப் பகுதியையும் உலுக்கிய ஒரு ஆழ்ந்த துரதிர்ஷ்டவசமான மற்றும் துயரமான சம்பவமாகும். வன்முறை எந்த நோக்கத்திற்கும் உதவாது, அது சந்தேகத்திற்கு இட மின்றி கண்டிக்கப்பட வேண்டும். பயங்கரவாதிகள் காஷ்மீரிகளக்கு விதிமுறைகளை விதிக்க முடியாது, அப்பாவி பொதுமக்களை குறி வைக்கும் இத்தகைய கோழைத்தன மான செயல்களுக்கு எந்த நாகரிக சமூகத்திலும் இடமில்லை. குற்றவாளி கள் அடையாளம் காணப்பட்டு தாமதமின்றி நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். காயமடைந்தவர்களுக்கு இரத்த தானம் செய்யவும் பிற உதவிகளை யும் செய்யவும் பல காஷ்மீரிகள் முன் வந்தனர். ஒரு சுற்றுலாப் பயணியைக் காப்பாற்ற முயன்றதாகக் கூறப்படும் காஷ்மீரி குதிரை உரிமையாளரின் கொலை, ‘காஷ்மீரின் சாதாரண மக்கள்  வகுப்புவாத உணர்வுகளைத் தூண்டும்  எந்தவொரு முயற்சிக்கும் இரையாக மறுத்து விட்டனர்’ என்பதற்கான அடையாளமாகும். கட்சி வேறுபாடுகளைக் கடந்து காஷ்மீர் மக்கள் ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர். தொடர்ச்சி யான போராட்டங்கள், மெழுகுவர்த்தி ஏந்திப் போராட்டம் மற்றும் கடை யடைப்பை நடத்தியுள்ளனர். வர்த்தக ர்கள், வணிகர்கள், டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரும் இந்த தாக்குதலை ஒரே குரலில் கண்டித்துள்ளனர். ஜம்மு - காஷ்மீருக்கு எதிரான பாது காப்பு நடவடிக்கைகளை மறுபரி சீலனை செய்யுமாறும், இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயல்கள் மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்ளு மாறும் ஒன்றிய அரசை நான் கேட்டுக் கொள்கிறேன். இதற்கிடையில், இந்த நெருக்கடி யான நேரத்தில், மக்கள் ஒற்றுமை யாக இருக்க வேண்டும், பயங்கர வாதிகளின் பிளவுபடுத்தும் மற்றும் ஏமாற்றும் நிகழ்ச்சி நிரலுக்கு இரை யாகக்கூடாது. காயமடைந்த சுற்றுலாப் பயணி களின் நிலை குறித்து விசாரிப்பதற்காக மருத்துவமனைக்குச் செல்ல அதிகாரி களிடம் அனுமதி கேட்டிருந்தேன், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, எனது கோரிக்கை மறுக்கப்பட்டது. இந்தத் தாக்குதல் காஷ்மீரி நெறி முறைகள் மீதும், ஆயிரக்கணக்கா னோரின்- குறிப்பாக சுற்றுலாத் துறை யில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்வா தாரம் மீதுமான தாக்குதலாகும். சுற்றுலாத்துறை ஒரு மறுமலர்ச்சியைக் கண்டு வருகிறது, இப்பகுதி முழுவதும் நம்பிக்கையையும் பொருளாதார நடவடிக்கையையும் உரு வாக்குகிறது. இதுபோன்ற செயல் சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதல் மட்டுமல்ல, நம் அனைவரின் மீதுமான தாக்குதலாகும். இவ்வாறு முகமது யூசுப் தாரிகாமி குறிப்பிட்டுள்ளார்.