கரூர்: சிபிஐ விசாரணையை ரத்து செய்யக் கோரி மனு
சென்னை, டிச. 2 - கரூரில், த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது, நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தில் சிபிஐ விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையை மீண்டும் தொடர அனுமதிக்க வேண்டும் என்றும், ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையத்தின் விசாரணையை தொடருவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.