tamilnadu

img

தனியார் வனப்பாதுகாப்பு சட்டத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு விலக்கு அவசியம் - ஆர்.செல்லசுவாமி

விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாட்டில், கன்னியாகுமரி மாவட்டத்தை தனியார் வனப்பாதுகாப்பு சட்டத்திலிருந்து விலக்க வேண்டும் என்ற முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரலாற்றுப் பின்னணி 1979 ஆம் ஆண்டு முதல் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 75,000 ஏக்கருக்கும் மேற்பட்ட பட்டா நிலங்கள் அவ்வப்போது தனியார் வனப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. 2010 அக்டோபர் 18 அன்று அப்போதைய மாவட்ட ஆட்சியர், இப்பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களும் செல்லாது எனவும், எந்தவிதமான புதிய பத்திரப் பதிவும் செய்ய முடியாது எனவும் மாவட்ட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார். இந்த திடீர் உத்தரவு மாவட்ட மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மக்கள் படும் இன்னல்கள் இச்சட்டத்தின் காரணமாக: - விவசாயிகள் தங்கள் நிலங்களை உரிமை மாற்றம் செய்ய முடியவில்லை - வங்கிகளில் அடமானம் வைக்க இயல வில்லை - இஷ்டதானம் செய்ய முடியவில்லை - திருமணம், உயர் மருத்துவம், பிள்ளைகளின் உயர்கல்வி போன்ற அத்தியாவசியத் தேவை களுக்காக நிலங்களை விற்க முடியாத நிலை - ரப்பர் மற்றும் பிற மரங்களை முறித்து மறு நடவு செய்ய முடியாத சூழல்

போராட்டங்களும்  அரசின் நடவடிக்கைகளும்:

- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட் டங்களை நடத்தி வருகின்றன - முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில், சிபிஐ (எம்) சட்டமன்ற உறுப்பினர்கள் இப்பிரச்ச னையை சட்டமன்றத்தில் எழுப்பினர் - அரசு ஒரு குழுவை அமைத்து ஆய்வு மேற் கொண்டது - இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பாதிக்கப்பட்ட மக்களால் குழுவிடம் நேரடி யாக வழங்கப்பட்டன

2015ல் கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தம்:

சட்டத்தில் 4ஏ என்ற புதிய சரத்து திருத்த மாக கொண்டுவரப்பட்டது. இதன்படி: - சொத்து உரிமையாளர்கள் தங்கள் சொத்துக் களை வரன்முறைப்படுத்த மாவட்ட வனக் குழுவிடம் அனுமதி பெற வேண்டும் - அனுமதி மறுக்கப்பட்டால், நிராகரிப்பு கடிதத் தின் நகலுடன் அரசுக்கு மேல்முறையீடு செய்யலாம் - ஆனால் இத்திருத்தம் ஏழை எளிய மக்களை மேலும் அலைக்கழிப்பதாகவே அமைந்துள் ளது தற்போதைய நிலை: - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆயிரக் கணக்கான விண்ணப்பங்கள் மாதக் கணக்கில் தேங்கிக்கிடக்கின்றன - சிறு ரப்பர் தோட்டங்கள், வீட்டுமனைகள், வீடுகள் என ஏராளமான சொத்துக்கள் இச்சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளன - பல ஆண்டுகளாக தீர்வு காணப்படாமல் ஏழை,  எளிய மக்களும் விவசாயிகளும் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர் தீர்வுக்கான வழி: - கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தனியார் வனப் பாதுகாப்பு சட்டத்திலிருந்து முழுமையான விலக்கு அளிப்பதே நிரந்தர தீர்வாக அமையும் - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிலுவை யில் உள்ள அனைத்து விண்ணப்பங்களுக் கும் உடனடி அனுமதி வழங்க வேண்டும் - முதல்வர் தலையிட்டு உடனடி தீர்வு காண வேண்டும்.