சேலம், ஜன.12- மேட்டூர் அணையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. பின்னர் தண்ணீர் திறப்பு படிபடியாக குறைக்கப்பட்டு ஞாயிறு காலை வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. தற்போது, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.03 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 745 கனஅடிதண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில், ஞாயிறன்று, வினாடிக்கு 674 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து டெல்டாவுக்கு 5 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 85.76 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.