கடம்பூர் மலைவாழ் மக்கள் ரூ. 2.40 லட்சம் நிதியளிப்பு!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டிற்கான நிதியளிப்பு நிகழ்ச்சி, கடம்பூர் மலைப் பகுதியில் வியாழனன்று நடை பெற்றது. ஈரோடு மாவட்டம், சத்திய மங்கலத்தை அடுத்த கடம்பூர் மலை யில் சாலட்டி, கிட்டாம் பாளையம், கரளயம் ஆகிய மூன்று இடங்களில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டு நிதியளிப்பு நிகழ்ச்சிக்கு செயலாளர் சி. சின்னசாமி தலைமை வகித்தார். கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சிறப்புரையாற்றினார். அவரிடம் அகில இந்திய மாநாட்டு நிதி யாக ரூ. 2 லட்சத்து 40 ஆயிரத்து 640 வழங்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் ஆர். ரகு ராமன், செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.கோமதி, சி. துரைசாமி, கே. மாரப்பன், எஸ்.வி. மாரிமுத்து, மாவட்டக்குழு உறுப்பினர்கள் என். சடையப்பன், தயாளும்மாள் மற்றும் மூத்த தலைவர்கள் கே. துரைராஜ், ஏ.எம். முனுசாமி, க. ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மார்ச் 13-இல் சிறப்புக் கருத்தரங்கம்
அகில இந்திய மாநாட்டையொட்டி கடம்பூர் மலைப் பகுதியில் வாழும் மலையாளி மக்களுக்கு பட்டியலின பழங்குடி மக்கள் என சான்று வழங்க வலியுறுத்தி சத்தியமங்கலத்தில் மார்ச் 13 அன்று சிறப்பு கருத்தரங்கம் நடைபெறுகிறது. அதில் வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் உரையாற்றுகிறார்.