tamilnadu

img

புதிர் விளையாட்டு

புதிர் விளையாட்டு

இன்றைக்கு விளையாடுவதற்கு முன் போல ஒரே ஒரு புதிர்தான். நன்றாக நேரம் எடுத்துக்கொண்டு விடையைக் கண்டுபிடிக்க யோசியுங்கள். ஒரு நோட்டில் எழுதியோ, படம் படமாக வரைந்தோ கூட புதிரை அவிழ்க்கலாம். முதலிலேயே விடையைப் பார்க்காமல் விளையாடும்போதுதான் ஆட்டம் அசத்தலாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன? சரியான அளவுக்கு  எப்படி தண்ணீர் ஊற்றுவது?  உங்களிடம் 3 லிட்டர் தண்ணீர் பிடிக்கக்கூடிய பாத்திர மும், 5 லிட்டர் பாத்திரமும்தான் இருக்கின்றன. 4 லிட்டர் பாத்தி ரமோ, 2 லிட்டர் பாத்திரமோ, ஒரு லிட்டர் பாத்திரமோ இல்லை.  அந்த இரண்டு பாத்திரங்களையும் பயன்படுத்தி ஒரு குழாயி லிருந்து தண்ணீர் பிடித்து மிகச்சரியாக 4 லிட்டர் தண்ணீரை  எப்படி அளந்து வைப்பீர்கள்?

விடைகள் முதலில் 5 லிட்டர் பாத்திரத்தை முழுமையாக நிரப்ப வேண்டும். அதிலே இருக்கும் தண்ணீரை 3 லிட்டர் பாத்திரம் நிறையும் வரை ஊற்ற வேண்டும். இப்போது 5 லிட்டர் பாத்திரத்தில் 2 லிட்டர் மீதம் இருக்குமா? அடுத்து, 3 லிட்டர் பாத்திரத்தில் உள்ள தண்ணீரை கொட்டிவிட வேண்டும் அல்லது தண்ணீரை வீணாக்கக்கூடாது என்பதால் தொட்டியில் ஊற்றிவிடலாம். இப்போது 5 லிட்டர் பாத்திரத்தில் இருக்கிற அந்த 2 லிட்டர் தண்ணீரை 3 லிட்டர் பாத்திரத்துக்கு மாற்ற வேண்டும். இப்போது அதில் ஒரு லிட்டர் ஊற்றுகிற அளவுக்கு இடம் இருக்கும். மீண்டும் 5 லிட்டர் பாத்திரத்தை முழுமையாக நிரப்ப வேண்டும். அதிலிருந்து, ஏற்கெனவே 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி வைத்திருக்கிற 3 லிட்டர் பாத்திரத்தை நிரப்ப வேண்டும். ஒரு லிட்டர் ஊற்றியவுடன் அது நிறைந்துவிடும்தானே? அப்படிச் செய்தால், 5 லிட்டர் பாத்திரத்தில் எவ்வளவு தண்ணீர் எஞ்சியிருக்கும்? சரியாக 4 லிட்டர் இருக்கும்!