ஜூலை 9 வேலை நிறுத்தம் : ஆதரவு திரட்டும் தலைவர்கள்
ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளை கண்டித்து, ஜூலை 9 அன்று மத்திய தொழிற்சங்கங்கள் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை அறிவித்து உள்ளன. இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தருமாறு, தமிழகத்தில் உள்ள ‘இந்தியா’ கூட்டணி கட்சித் தலைவர்களை மத்திய தொழிற்சங்கங்களின் தலைவர்கள் சந்தித்து வருகின்றனர். இதனையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசனைச் சந்தித்து கி. நடராஜன் (தொமுச), சி. திருவேட்டை (சிஐடியு), ராதாகிருஷ்ணன் (ஏஐடியுசி) உள்ளிட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் ஆதரவு திரட்டினர்.