tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பத்திரிகையாளர் சுஷாந்த் சிங்

அமெரிக்க அதிகாரிகளுடன் சந்திப்புகளை ஏற்பாடு செய்ய இந்தியாவின் வெளியுறவு அமைச்சருக்கு ஏன் ஒரு இடைத்தரகர் (லாபி நிறுவனம் ) தேவைப்படுகிறது என்ற கேள்வி எழுகிறது. இது ஜெய்சங்கரை அடிப்படை வேலைகளைக்கூட செய்யத் தெரியாதவர் போலவும், மோடி அரசாங்கம் டிரம்ப் நிர்வாகத்திடம் இருந்து மிகக் குறைந்தபட்ச முடிவுகளை கூட  எடுக்க முடியாத நிலையில் இருப்பதையும், மோடியின் இராஜதந்திரம் குறித்த உள்நாட்டு ஊடகங்களின் செய்திகள் விளம்பர நோக்கத்தில் அமைவதையுமே  காட்டுகிறது.

சிபிஎம் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ்

உலகளாவிய ஸ்திரமின்மைக்கு  மூல காரணமே அமெரிக்கா தான் என  பெரும்பாலான நாடுகள் பார்க்கின்றன. அப்படியிருக்க இந்தியா ஏன் மௌனமாக இருக்கிறது? இராக்கில் நடந்த அந்தப் பயங்கரத்தை நான் நேரில் கண்டேன். அல்-அமிரியா பதுங்குக்குழியில் இருந்த பொதுமக்கள் அமெரிக்கக் குண்டுகளால் உயிருடன் கருகிப்போனார்கள். சுதந்திர நாடுகளின் மீது பேரழிவுகளைத் திணிப்பது தடையின்றித் தொடர்கிறது.

காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுப்ரியா

இந்தியாவை உலக வரைபடத்தில் இடம்பெறச் செய்த நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் அமர்த்தியா சென், இப்போது இங்கு தனது வாக்காளர் தகுதியை நிரூபிக்க வேண்டியுள்ளது. உலக நாடுகள் அவரை  அழைத்துக்கொள்ள முயன்ற போதும்  இந்தியக் குடியுரிமையை பெருமையுடன் தக்கவைத்துக்கொண்ட 92 வயதுடைய ஒரு மாமனிதரைத் துன்புறுத்திய ஞானேஷ் குமாருக்கும் அவரது அமைப்புக்கும் வாழ்த்துகள்.