tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஜான் ஹூபர்ட் மார்ஷல் சிலை திறப்பு

சிந்துவெளி நாகரிகத்தை முதன்முதலில் வெளிப்படுத்தி திராவிட நாகரிகம் எனும் கருதுகோளுக்கு வழிவகுத்த பிரிட்டிஷ் இந்தியாவின் தொல்லியல் துறை தலைமை இயக்குநர் சர் ஜான் ஹூபர்ட் மார்ஷலுக்கு எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதனன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மு.பெ. சாமிநாதன், மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், நிதித் துறை முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பால் குளிர்விக்கும் மையங்கள் மூடப்படாது!

சென்னை: கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்ற தொகுதி யில் உள்ள பழமை வாய்ந்த பால் குளிர்விக்கும் மையத் திற்கு மூடுவிழா நடத்தப்படும் என்ற தகவல் முற்றிலும் தவ றானது. தமிழ்நாட்டில் பால் குளிர்விக்கும் மையங்கள் அதிக மாக திறக்கப்படுமே தவிர, எந்த ஒரு பகுதியிலும் மூடப்படாது  என்று அதிமுக உறுப்பினரின் கேள்விக்கு அமைச்சர் ஆர். எஸ்.ராஜ கண்ணப்பன் தெரிவித்தார்.

தங்கு தடையின்றி ரேசன்

ஏழை-எளிய மக்கள் அதிகாலை பணிக்கு சென்று இரவு  நேரத்தில் வீடு திரும்புவதால் நியாய விலைக் கடைகளில் பொருட்களை பெற முடியவில்லை என்பதால் நாகர்கோ வில் தொகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் நடமாடும் நியாய விலைக் கடைகள் அமைக்க அரசு முன்வருமா? என பாஜக உறுப்பினர் எம். ஆர்.காந்தி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சக்கரபாணி, “தமிழ்நாடு முழுவதும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் 1 ஆம் தேதி முதல் மாத இறுதி  நாள் வரை அனைத்து நாட்களிலும் ரேசன் பொருட்கள் தங்கு  தடையின்றி வழங்கப்படுகிறது. எனவே, மக்கள் எந்த நேரத்தி லும் வாங்கிக் கொள்ளலாம்” என்றார்.

விக்கிரபாண்டியத்தில் ஆரம்ப சுகாதார நிலையம்?

திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட விக்கிரபாண்டியம் கிராமத்தில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலை யம் தொடங்கப்படுமா? என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  உறுப்பினர் மாரிமுத்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதி லளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆரம்ப சுகாதார  நிலையம் புதிதாக தொடங்குவதற்கான ஒன்றிய அரசு  விதித்திருக்கும் அனைத்து இலக்கையும் முழுமையாக பூர்த்தி செய்திருந்தால், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்றார்.

தடைகளைத் தாண்டி...

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 10 இடங்களில் கல்லூரி தொடங்குவதற்கு அறிவிப்பு கள் வெளியிடப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட்டது. சென்னையில்  முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில் முதன்முதலில் கல்லூரி தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஒட்டன்சத்தி ரம், ஆற்காடு, தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் கல்லூரிகள்  துவங்கப்படுகின்றன. திருத்தணி உள்ளிட்ட 6 தொகுதிகளில் கல்லூரி துவங்குவதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் அனைத்தையும் விரைவாக முடித்து கல்லூரிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

2 லட்சம் இலவச மின் இணைப்புகள்

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்து இதுவரை விவ சாயிகளுக்கு 2 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப் பட்டுள்ளன. இந்த ஆண்டு முன்பதிவு செய்துள்ள விவசாயி களுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்புகள் விரைவில் வழங்கப்படும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட துணை  மின் நிலையங்களில் 250 துணை மின் நிலையங்களுக்கு நிர்வாக அனுமதிகள் வழங்கப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள துணை மின் நிலையங்களுக்கு திட்ட அனுமதி தயார் செய்யப் பட்டுள்ளது. இதற்கான அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும் என்றார்.