‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தால் பணியிட இழப்பு, பணிச்சுமை
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் தருமபுரி, டிச.24- ‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தால் பணியிட இழப்பு மற்றும் பணிசுமை ஏற்படுத்துவதை கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத் தினர் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தினை ஒழித்து, விபி ஜி ராம் ஜி என்ற திட் டத்தினை ஒன்றிய அரசு உருவாக்கி யுள்ளது. இதன்மூலம் ஊரக வளர்ச்சித்துறையினருக்கு பணி யிட இழப்பு, பணிச்சுமை மற்றும் நிதிப்பங்கீடு உள்ளிட்ட பாதகங் களை உருவாக்குவதை கண் டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் புத னன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். தருமபுரி ஆட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, சங்கத்தின் வட்டச் செய லாளர் தங்கதுரை தலைமை வகித் தார். இதில் மாநில துணைத்தலை வர் ச.இளங்குமரன், மாநில செயற் குழு உறுப்பினர் பி.பிரின்ஸ், மாவட்ட தணிக்கையாளர் சிபி சக் கரவர்த்தி ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர். இதேபோன்று, தருமபுரி வட் டார வளர்ச்சி அலுவலகம் முன்பு வட்டத் தலைவர் பிரசாந்த், நல்லம் பள்ளியில் மாவட்ட துணைத்தலை வர் முருகன், பாலக்கோட்டில் வட் டத் தலைவர் பாரதிசெல்வம், காரி மங்கலத்தில் வட்டத் தலைவர் மாதையன், பென்னாகரத்தில் வட் டத் தலைவர் குமார், ஏரியூரில் மாவட்ட துணைத்தலைவர் பால குமாரன், மொரப்பூரில் வட்டச் செய லாளர் நேரு, அரூரில் வட்டத் தலை வர் வீரமணி, பாப்பிரெட்டிப்பட்டி யில் வட்டத் தலைவர் தென்னவன், கடத்தூரில் வட்டார வளர்ச்சி அலுவ லர்களின் ஒருங்கிணைப்பாளர் எம். சுருளிநாதன் ஆகியோர் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் சேலம் மாவட்டத்தில் அயோத் தியாபட்டினம், ஏற்காடு, ஓமலூர், காடையாம்பட்டி, கெங்கவல்லி, சேலம் ஒன்றியம், வாழப்பாடி உள் ளிட்ட 20 ஊராட்சி ஒன்றிய அலுவ லகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் செந்தில், செயலாளர் ஜான் ஆன்ஸ்டீன், பொருளாளர் வடிவேல் மற்றும் வட்ட நிர்வாகி கள் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.
