tamilnadu

img

ஜன. 3 முதல் பொங்கல் தொகுப்புக்கு டோக்கன்

சென்னை, டிச. 31 - 2025-ஆம் ஆண்டு தைப் பொங்கலைச் சிறப்பாகக் கொண் டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத் தினருக்கு, நியாய விலைக்கடை கள் மூலமாக தலா ஒரு கிலோ  பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  இந்நிலையில், பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் ஜனவரி 3 முதல் வீடு, வீடாக விநி யோகிக்கப்படும் என்றும், பொங்கல் தொகுப்புக்களை நியாய விலைக் கடைகளில் ஜன வரி 9 முதல் ஒரு நாளுக்கு 200 குடும்ப அட்டைதாரர்கள் வீதம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது.