tamilnadu

உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த ஜாபர் ஹுசைன் என்கவுண்ட்டர்!

 உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த ஜாபர் ஹுசைன் என்கவுண்ட்டர்!

சென்னையில் ஒரே நேரத்தில் 8-க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர் நகைப் பறிப் பில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட நபர், போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சென்னை, திருவான்மியூர், பெசண்ட் நகர், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி,  பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் காலை 6  மணி முதல் 7 மணி வரை, அடுத்தடுத்து 8 இடங்களில் நகைப்பறிப்பு சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், இதுதொடர்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஜாபர் குலாம் ஹுசைன் உட்பட 2 பேரை,  சென்னை விமான நிலையத்தில் போலீ சார் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், ஜாபர் குலாம் ஹுசைன் மீது பல்வேறு மாநி லங்களில் 50-க்கும் மேற்பட்ட நகைப் பறிப்பு  வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில், திருடிய நகைகளை, சென்னை தரமணி அருகே பதுக்கி வைத்தி ருப்பதாக ஜாபர் குலாம் ஹுசைன் கூறிய தாகவும், அவற்றைப் பறிமுதல் செய்வ தற்காக அழைத்துச் சென்றபோது, தரமணி  ரயில் நிலையம் அருகே திடீரென தான்  பதுக்கி வைத்திருந்த கைத் துப்பாக்கியை எடுத்து போலீசாரை சுட்டுவிட்டு தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து தற்காப்புக்காக ஜாபர்  குலாம் ஹுசைனை போலீசார் துப்பாக்கி யால் சுட்டதாகவும், இதில், ஜாபரின் மார்  பில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்த  நிலையில், அவரை அருகில் உள்ள தனி யார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அங்கு அவரை பரிசோ தித்த மருத்துவர்கள், ஜாபர் குலாம் ஹுசைன் ஏற்கெனவே இறந்து விட்ட தாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஜாபர் குலாம் ஹுசைன்  உடலை உடல்கூராய்வுக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பிவைத்தனர்.