tamilnadu

img

மக்கள் விரோத மசோதாக்களைத் தடுத்து நிறுத்தியது இடதுசாரிகளே!

மக்கள் விரோத மசோதாக்களைத் தடுத்து நிறுத்தியது இடதுசாரிகளே!

தியாகதுருகம், மார்ச் 27 - இடதுசாரி கட்சிகளால் தான் மக்கள் மற்றும் தொழிலாளர் விரோத மசோதாக்கள் சட்டமாக்கப் படாமல் தடுத்து நிறுத்தப்பட்டன என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் கூறினார். கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாக துருகத்தில் கட்சியின் சார்பில் தேர்தல் நிதியளிப்பு மற்றும் அர சியல் விளக்கப் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை (மார்ச் 26) நடை பெற்றது. வட்டச் செயலாளர் வெ. ஏழுமலை தலைமை தாங்கினார். வட்டக்குழு உறுப்பினர் ஆர்.செல்வ ராஜ் வரவேற்றார். இக்கூட்டத்தில் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது: எந்த மக்களுக்காக வாதாடு கிறதோ, போராடுகிறதோ, அந்த மக்களிடம் மட்டுமே நிதி திரட்டும் ஒரே கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. முதலாளிகளிடம் கையேந்தி நிற்காத கட்சி இது.  இடதுசாரிகள் இல்லையென் றால் இந்தியாவிற்கே எதிர்காலம் இல்லை. ஆட்சி அதிகாரத்தில் இல்லாவிட்டாலும், தேசத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரலை சிபிஎம் தான் தீர்மானிக்கிறது. மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் 100 நாள் வேலைத் திட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டு  வரப்பட்டதில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு முக்கியப்பங்குண்டு. வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் கட்சி ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த விவசாயிகள் நலனுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்தில் சிபி எம் முக்கியப் பங்காற்றியது. கோவை பாரதியார் பல்கலைக்கழ கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு 45 ஆண்டுகால மாக வழங்கப்படாத இழப்பீட்டுத் தொகையான ரூ. 165 கோடியை, கட்சியின் தொடர் போராட்டத்தின் மூலமே பெற்றுத் தந்துள்ளோம்.  சாதி ஆணவக் கொலை களுக்கு எதிராகப் போராடியதன் மூலம், தற்போது ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஜனநாயகக் கடமை 2026 சட்டமன்றத் தேர்தல், ஜனநாயகமா அல்லது சர்வாதி காரமா என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜனநாயகத்தின் பக்கமும், மதச்சார்பின்மையின் பக்கமும் நிற்கும். நாடு முழுவதும் இலவச மின்சாரத்தை ரத்து செய்து, மின் விநியோகத்தைத் தனியார்மய மாக்கும் மசோதாவை நாடாளு மன்றத்தில் இடதுசாரிகளே தடுத்து நிறுத்தியுள்ளனர். எனவே, பாஜகவோடு கூட்டணி வைத்துள்ள அதிமுக-வால் இலவச மின்சாரம் வழங்க முடியாது. ஒன்றிய பாஜக அரசு இந்தி யப் பொருளாதாரத்தை அதானி,  அம்பானி போன்ற கார்ப்பரேட்டு களிடம் ஒப்படைத்து வருகிறது. மதச் சார்பின்மையையும் ஜனநாய கத்தையும் பாதுகாக்க அதிமுக - பாஜக கூட்டணியைத் தோற் கடித்து, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்ட ணியை வெற்றி பெறச் செய்வது மக்களின் கடமையாகும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, கட்சி நிதியாக ரூ.1,50,000 வழங்கப் பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.சுப்பிர மணியன், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் ஏ.வி. ஸ்டாலின் மணி, பி.மணி, ஜி. அருள்தாஸ், என். தன லட்சுமி, அ.பா. பெரியசாமி உள்ளிட் டோர் கலந்துகொண்டனர். வட்டக் குழு உறுப்பினர் கே. கொளஞ்சி நன்றி கூறினார்.