இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) கனவு திட்டமான “ஸ்பேடெக்ஸ்” திட்டத்தின் 2 செயற் கைக்கோள்களை யும் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு இணைக்க இஸ்ரோ திட்டமிட்டது. இதற் காக 2 செயற்கைக் கோள்களையும் நெருக்கமாக கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. புதன்கிழமை 8 மணி அளவில் 2 செயற்கைக் கோள்களுக்கு இடையே யான இடைவெளி தூரம் 500 மீட்டரி லிருந்து 250 மீட்டராக குறைக்கப்பட்டது. ஆனால் திடீரென 2 செயற்கைக் கோள்களை ஒன்றிணைக்கும் “டாக்கிங்” நடவடிக்கையை இஸ்ரோ மீண்டும் ஒத்திவைத்துள்ளது. விண்வெளியில் நிச்சயமற்ற சூழல் நிலவுவதால் செயற்கைக்கோள்கள் இணைப்பு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகவும், 2 செயற்கைக் கோள்களும் பாதுகாப்பாக இருப்பதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. 2ஆவது முறை... 2024ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலம் 220 கிலோ எடை கொண்ட தலா 2 செயற் கைக் கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. பூமியிலிருந்து 475 கி.மீ., தொலைவில் உள்ள சுற்றுவட்டப் பாதை யில் நிலை நிறுத்தப்பட்ட 2 செயற்கைக் கோள்களும் இணைக்கும் பணி ஜனவரி 7ஆம் தேதி நடைபெறும் என இஸ்ரோ அறிவித்தது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயற்கைக்கோள் இணை ப்பு பணி 9ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டிருந்த நிலையில், தற்போது விண்வெ ளியில் நிலவும் நிச்சயமற்ற சூழல் கார ணமாக 2ஆவது முறையாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.