tamilnadu

img

பேரழிவை ஏற்படுத்தும் அணுசக்தி மசோதா மக்களவையில் நிறைவேற்றம் மோடியின் கார்ப்பரேட் நண்பர்களுக்காக மக்களை பேரழிவுக்கு உள்ளாக்குவதா? மக்களவையில் ஆர்.சச்சிதானந்தம் கேள்வி

பேரழிவை ஏற்படுத்தும் அணுசக்தி மசோதா மக்களவையில் நிறைவேற்றம் மோடியின் கார்ப்பரேட் நண்பர்களுக்காக  மக்களை பேரழிவுக்கு உள்ளாக்குவதா? மக்களவையில் ஆர்.சச்சிதானந்தம் கேள்வி

அணுசக்தி மசோதா தொடர்பான விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் பங்கேற்றுப் பேசினார். அவரது உரையின்  பகுதிகள் வருமாறு:  ‘ஷாந்தி’ என்றால் அமைதி என்று பொருள். ஆனால் இந்த மசோதாவின் பெயரிலேயே ஒரு முரண்பாடு பொதிந்துள்ளது. ‘புன்னகைக்கும் புத்தர்’ (Operation Smiling Buddha) திட்டத்தைப் போலவே, இதுவும் பெயரில் அமைதியைக் கொண்டி ருந்தாலும், உண்மையில் இது அமைதியின்மையை பிரதிபலிக்கி றது. சொல்லப்போனால், இந்த பெயர் மக்களுக்கு அமைதியைத் தருவதற்காக அல்ல, மாறாக அரசாங்கத்திற்குத் தனியார்மய மாக்கலின் மீதுள்ள தீராத காதலைக் காட்டுவதற்காகவே சூட்டப்பட்டுள்ளது. 1948-ஆம் ஆண்டு அணுசக்தி சட்டம் ரத்து செய்யப்பட்டு, 1962-இல் புதிய சட்டம் இயற்றப்பட்டது. அதன் பிறகு, மூன்று முறை முற்போக்கான முறையில் திருத்தங்கள் மேற்கொள் ளப்பட்டன. அந்தத் திருத்தங்கள் மத்திய அரசிடம் மட்டுமே இருந்த அணுசக்தி உற்பத்தித் துறையை படிப்படியாக விரிவு படுத்தின. இருப்பினும், “அணுசக்தி என்பது இந்திய மக்களின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்” என்ற அடிப்ப டைக் கொள்கை மாறாமல் இருந்தது. அணுசக்தி என்பது நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்கள் நலனுக்கான ஒரு முக்கிய வளமாகும். மோடியின் நண்பர்களுக்கானது துரதிர்ஷ்டவசமாக, இந்த ‘ஷாந்தி மசோதா 2025’ அந்த அடிப்படை கொள்கையிலிருந்து முற்றிலும் விலகிச் செல்கிறது. அணுசக்தி இனி மக்கள் நலனுக்கானது அல்ல, அது கார்ப்ப ரேட் நலனுக்கானது - குறிப்பாக மோடியின் நெருங்கிய நண்பரான அதானிக்கானது - என்பதை இந்த மசோதா வெளிப்படுத்துகிறது. இதுவரை 100% மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு துறை, இப்போது முறையாகத் தனியார் ஆதிக்கத்திற்குத் திறந்து விடப்படுவது மிகுந்த கவலையளிக்கிறது. பொதுத்துறையின் சாதனைகள் m 2026-க்குள் கல்பாக்கத்தில் நாட்டின் முதல் ‘புரோட்டோ டைப் ஃபாஸ்ட் பிரீடர் ரியாக்டர்’ (PFBR) செயல்பாட்டுக்கு வர வுள்ளது. இது நமது அணுசக்தித் திட்டத்தின் முக்கிய மைல்கல். m பாவினி (Bhavini), தேசிய அணுமின் கழகம் (NPCIL) போன்ற  பொதுத்துறை நிறுவனங்கள் அணுசக்தியைப் பாதுகாப்பா கவும், உள்நாட்டுத் தொழில்நுட்பத்துடனும் விரிவாக்கம் செய்ய முழுத் திறன் கொண்டவை என்பதை கல்பாக்கம் நிரூபித்துள்ளது.  mவெளிநாட்டு அல்லது தனியார் நிறுவனங்களின் உதவி யின்றி, உள்நாட்டு வடிவமைப்பு மற்றும் எரிபொருள் தொழில் நுட்பத்துடன் நாம் தற்சார்பு அடைந்துள்ளோம். இந்தியாவின் அணுசக்தித் திறன் தற்போதுள்ள 8.18 ஜிகாவாட்டில் இருந்து 55 ஜிகாவாட் ஆகவும், பின்னர் 100 ஜிகாவாட் ஆகவும் உயரவுள்ளது. இவை அனைத்தும் பொ துத்துறை முதலீடு மற்றும் ஏஇஆர்பி (AERB)-ன் கடுமையான கண்காணிப்பின் கீழ் சாத்தியமாகிறது. இச்சூழலில், அணு சக்தியைத் தனியார்மயமாக்குவது தேவையற்றது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட. கேள்விக்கணைகள் அணுசக்தி என்பது ஒரு சாதாரண வணிகப் பொருள் அல்ல. இது தேசியப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்தது.தனியார் துறையை அனுமதிக்கும் முன் அரசு கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்:  m தனியார் அணுமின் நிலையங்களுக்குத் தேவையான அணு எரிபொருளை வழங்குவது யார்? அரசு வழங்குமா அல்லது தனியார் நிறுவனங்களே இறக்குமதி செய்யுமா? m பயன்படுத்தப்பட்ட எரிபொருள் (Spent fuel) எவ்வாறு சேமிக் கப்படும், கண்காணிக்கப்படும்? அதன் நீண்டகாலப் பாது காப்பிற்கு யார் பொறுப்பு? m40 ஆண்டுகாலச் செயல்பாட்டிற்குப் பிறகு, அந்த அணுமின் நிலையங்களை செயலிழக்கச் செய்யும் (Decommissioning) பொறுப்பை ஏற்பது யார்? m எதிர்பாராதவிதமாக அணுசக்தி விபத்து ஏற்பட்டால், அதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவது யார்? நந்தாதேவி விவகாரம் இமயமலையின் நந்தாதேவி பகுதியில் நிறுவப்பட்டு, பின் காணாமல் போன அணுக்கரு கருவி பற்றி ‘நியூயார்க் டைம்ஸ்’ வெளியிட்ட செய்தியைச் சபையின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். நாகசாகி அணு குண்டுத் தாக்குதலில் பயன்படுத்தப் பட்ட புளூட்டோனியத்தில் மூன்றில் ஒரு பங்கு அந்தக் கருவியில் இருந்தது. அந்தப் புளூட்டோனியம் பனிப்பாறைகளில் கலந்து, ஆற்று நீரில் கலந்துவிடுமோ என்ற அச்சம் இன்றும் மக்களிடம் உள்ளது. அரசுக்குச் சொந்தமான ஒரு கருவிக்கே இதுவரை யாரும் பொறுப்பேற் காத நிலையில், தனியாரிடம் ஒப்படைத்தால் என்னவாகும்? எனவே, இந்த ‘ஷாந்தி மசோதா 2025’-ன் உண்மையான நோக்கத்தையும் விளைவுகளையும் சபையை கவனமாகப் பரிசீலிக்கக் கேட்டுக்கொள்கிறேன். அணுசக்தி என்பது அதானி போன்ற ஒரு சில கார்ப்பரேட்களின் லாபத்திற்காக அல்லாமல், இந்திய மக்களின் நலனுக்கான பொதுச் சொத்தாகவே நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.