இருகூர் போராட்ட வெற்றி-292 குடும்பங்களுக்கு சொந்த நிலம்!
கோயம்புத்தூர், மார்ச் 27- கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டம், இருகூர் கிராமத்தில் 30 ஆண்டுகளாக நடைபெற்ற மக்க ளின் நீண்ட போராட்டம் வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 292 நிலமற்ற குடும்பங்களுக்கு தலா 1.5 செண்ட் வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு, மக்கள் தங்கள் சொந்த நிலத்தில் குடியேறியுள்ளனர். வழங்கப்பட்ட நிலத்தின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.25 லட்சம் என மதிப்பிடப் படுகிறது. 1993 ஆம் ஆண்டு நிலமற்ற ஒடுக் கப்பட்ட மக்களுக்காக வீட்டுமனை பட்டா கேட்டு தொடங்கிய இந்தப் போ ராட்டத்தில், அரசு 7 ஏக்கர் 29 செண்ட் நிலத்தை கையகப்படுத்தி 1996இல் 192 குடும்பங்களுக்கு பட்டா வழங்கியது. இந்த மக்களின் சட்டப் பூர்வ குடியேற்றத்தை தடுக்கும் வித மாக 2017 ஆம் ஆண்டு போலி ஆவ ணங்களுடன் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை காரணம் காட்டி வருவாய்த்துறை நிர்வாகமும் மக்க ளுக்கு நிலத்தை அளந்து கொடுக்க மறுத்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நீண்ட கால சட்ட மற்றும் களப் போராட்டத்தின் பலனாக, 20.09.2025 அன்று நீதி மன்றம் அரசின் நில எடுப்பு நட வடிக்கை சட்டப்பூர்வம் என தீர்ப்பு வழங்கியது. ஆண்டுதோறும் தோழர் பி. சீனிவாசராவ் நினைவு தினத்தை யொட்டி நடத்தப்பட்ட போராட் டங்களின் தொடர்ச்சியாக, 30.09.2025 அன்று நடைபெற்ற “நிலத்தில் குடி யேறும்” போராட்டம் அரசுக்கு பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தியது. அந்த நீண்ட கால போராட்டத்தின் வெற்றியாக, 24.02.2026 அன்று அதி காரிகள் முன்னிலையில் நிலம் அளந்து 292 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நீண்ட போராட்டத்தில் மறைந்த தோழர் யு.கே.சிவஞானம் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தார். கோயம்புத்தூர் முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக் குழுக் கள் இணைந்து இந்தச் சாதனையை நிறைவேற்றின. இந்நிலையில், 25.03.2026 அன்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநிலத் தலைவர் த.செல்லக் கண்ணு, பொதுச் செயலாளர் பி. சுகந்தி, துணைப் பொதுச் செயலா ளர் பி.பி.பழனிச்சாமி, மாவட்டத் தலைவர் ஆர்.மகேஸ்வரன் மற்றும் மாவட்டச் செயலாளர் த.நாகராஜ் ஆகியோர் பயனாளிகளைச் சந்தித்து போராட்டத்தில் உறுதியாக நின்ற தற்கு வாழ்த்தினர். பட்டா பெற்ற மக்கள் தங்களின் உணர்ச்சிகரமான மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரி வித்தனர்.