மின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தினால் பின்விளைவுகள் கடுமையாக இருக்கும் ஈரான் எச்சரிக்கை
டெஹ்ரான், மார்ச் 22- ஹோர்முஸ் ஜலசந்தி யை அடுத்த 48 மணி நேரத் திற்குள் ஈரான் ‘முழுமை யாகத் திறக்காவிட்டால்’, அந்நாட்டின் மின் உற்பத்தி நிலையங்கள் அழிக்கப் படும் என்று அமெரிக்க ஜனா திபதி டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். இந்நிலையில், மின் கட்டமைப்புகள் மீது தாக்கு தல் நடத்தினால் பின்விளை வுகள் கடுமையாக இருக்கும் என அமெரிக்கா, இஸ்ரே லுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக ஈரான் நாடாளுமன்ற சபாநாய கர் முகமது பாகர் கலிபாப் மேலும் கூறுகையில், “ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் இலக்கு வைக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள முக்கியக் கட்ட மைப்புகள் மற்றும் எரிசக்தி வசதிகள் ஈடுசெய்ய முடி யாத அளவிற்கு அழிக்கப் படும். குறிப்பாக ஈரான் இந்த நடவடிக்கையை மேற் கொண்டால் உலக சந்தை யில் கச்சா எண்ணெய் விலை நீண்ட காலத்திற்கு மிக உயர்வாகவே இருக்கும். அதை தடுக்க முடியாது” என அவர் எச்சரிக்கை விடுத் துள்ளார்.