tamilnadu

img

அகழாய்வு குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம்! சு. வெங்கடேசன் எம்.பி. பங்கேற்றார்

அகழாய்வு குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம்! சு. வெங்கடேசன் எம்.பி. பங்கேற்றார்

மதுரை, ஜன. 23 - “தமிழ்நாட்டு அகழாய்வுகளில் அண்மைக்கால அறிவியல் ஆய்வுகள்” என்ற தலைப்பிலான மூன்று நாள் சர்வதேசக் கருத்தரங்கம் ஜனவரி 22 அன்று மதுரையில் துவங்கி நடை பெற்று வருகிறது. மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள ஹோட்டல் கோர்ட்யார்ட் மேரி யாட்டில் நடைபெறும் இந்த பன்னாட்டுக் கருத்தரங்கில், தமிழ்நாட்டில் நடை பெற்ற அகழாய்வுகளில் கண்டெடுக்கப் பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ள அரங்கினை மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்க டேசன், தொல்லியல் துறை அதிகாரி களுடன் இணைந்து வெள்ளிக்கிழமை இரண்டாம் நாள் நிகழ்வில் பார்வையிட் டார். இந்த நிகழ்வில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி. செல்வராஜ், மாவட்ட நிர்வாகிகள் க. செந்தில், விக்னேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பி. கோபி நாத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.