tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

கூட்ட அனுமதிக்கு ‘சுவிதா’ மூலமே விண்ணப்பிக்க அறிவுறுத்தல்!

சென்னை, மார்ச் 31 - தேர்தல் தொடர்பான அனைத்து அனுமதி விண்ணப்பங்களையும் suvidha.eci.gov.in என்ற ‘சுவிதா’ இணையதளம் மூலம் மட்டுமே  சமர்ப்பிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா  பட்நாயக் அறிவுறுத்தியுள்ளார்.  ஹெலிகாப்டர் பயன்படுத்துவதற்கு, ஒலிபெருக்கியுடன் கூட்டம்  நடத்துவதற்கு, ஊர்வலம் மற்றும் பேரணி நடத்துவதற்கு, வாகன அனுமதி மற்றும் சுவரொட்டிகள் காட்சிப்படுத்துவதற்கு என பல்வேறு  அனுமதிகளுக்கு இவ்வழியாக விண்ணப்பிக்கலாம். நிகழ்வு நடைபெறுவதற்கு குறைந்தது 48 மணி நேரத்திற்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும், விண்ணப்பங்கள் 24 மணி நேரத்திற்குள் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆர்டிஇ மாணவர் சேர்க்கைக்கு உத்தரவு

சென்னை, மார்ச் 31 - கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவிகிதம் இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.  இதன்படி 2026-27ஆம் கல்வியாண்டுக்கான ஆர்டிஇ மாணவர் சேர்க்கையை தொடங்க தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தர விட்டுள்ளார். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 2 லட்சத்திற்கும் கீழ்  உள்ள அனைத்துப் பிரிவு மக்களின் குழந்தைகளும் இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

68 சுங்கச் சாவடிகளில்   கட்டண உயர்வு அமல்

சென்னை, மார்ச் 31- தமிழ்நாட்டிலுள்ள 68 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை-கன்னியா குமரி, திருச்சி-சேலம், சேலம்-கோயம்புத்தூர் உள்ளிட்ட முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள 60 சுங்கச்சாவடிகளிலும், வண்டலூர்-மிஞ்சூர் வெளிவட்டச் சாலையில் 4, மதுரை வெளிவட்டச் சாலையில் 2, மாநில நெடுஞ்சாலைகளில் 8 சுங்கச்சாவடிகளிலும் கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது.  சுமார் 3 முதல் 5 சதவீதம் வரை உயர்த்தப் படவுள்ள கட்டணத்தில் கார்களுக்கு ரூ.5வரையும், கனரக வாகனங்களுக்கு ரூ.40வரையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.  இதனால் அத்தியாவசியப் பொருள் களின் விலை உயரும் அபாயம் குறித்தும், கிராமப்புற சாலைகளில் நெரிசல் அதி கரிக்கும் வாய்ப்பு குறித்தும் கவலை எழுந்துள் ளது. கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்யுமாறு அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.