திருப்பூரில் தொழிற்சாலை கழிவுகள் மிகப்பெரும் சவால் பிரித்துத் தர தொழில், வர்த்தக துறையினரிடம் அறிவுறுத்தல்
திருப்பூர், டிச. 16 - திருப்பூரில் தொழிற்சாலையில் உற் பத்தியாகும் உலர் கழிவுகளை இதர குப்பையுடன் கலப்பதனால் திடக்கழிவு மேலாண்மை மிகப்பெரும் சவாலாக உள்ளது. எனவே அனைத்து தொழிற்சா லைகளும் மொத்தமாக உற்பத்தியா கும் உலர் கழிவுகளை தனியாக சேக ரித்து மாநகராட்சி வசம் ஒப்படைப்ப தற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு அனைத்து தொழில், வர்த்தகத் துறையினரும் ஒத்துழைப்புத் தர வேண் டும் என்று நகராட்சிகள் நிர்வாக இயக்கு நர் மதுசூதன் ரெட்டி கூறினார். திருப்பூர் மாநகராட்சியில் நாளொன்றுக்கு 100 கிலோவுக்கு மேல் குப்பையை உருவாக்கும் தொழில், வர்த்தக நிறுவனங்களின் கழிவுகளை மேலாண்மை செய்வது குறித்த செயல் விளக்கக் கூட்டம் மாநாட்டு மைய தரைத் தள (டவுன்ஹால்) அரங்கத்தில் செவ் வாயன்று நடைபெற்றது. இக்கூட்டத் தில் நகராட்சிகள் நிர்வாக இயக்குநர் மதுசூதன் ரெட்டி, மேயர் ந.தினேஷ்கு மார், மாநகராட்சி ஆணையர் எம்.பி. அமித், துணை மேயர் ஆர்.பாலசுப்பிரம ணியம், துணை ஆணையர் மகேஸ் வரி உள்பட மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் திருப்பூர் ஏற்றுமதி யாளர் சங்கம், திருப்பூர் உணவக உரி மையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல் வேறு சங்கத்தினர், தொழில், வியாபார அமைப்பினர், தன்னார்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதில் அதிகாரிகள் கூறியதாவது: திருப்பூர் மாநகராட்சியில் மற்ற மாநக ராட்சி, நகராட்சிகளில் இல்லாத அள வுக்கு தொழிற்சாலைகள் குடியிருப்பு பகுதிகள் கலந்து இருக்கின்றன. இதில் தொழிற்சாலை கழிவுகளை, வீட்டுக் குப்பையுடன் வீதிகளில் கொட்டுவ தால் தரம் பிரித்து எடுப்பது பெரும் சவா லாக உள்ளது. கடந்த இரண்டு மாத கால மாக திருப்பூரில் குப்பை அகற்றப்படா மல் ஆங்காங்கே தேங்கி இருக்கிறது. தொழிற்சாலையில் உற்பத்தியா கும் உலர் கழிவுகளை பொதுவாக குப் பையில் கொட்டாமல், தனியாக பிரித்து வாங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. மொத்தமுள்ள அனைத்து தொழில் நிறுவனங்களையும் கணக்கெடுத்து, வார்டு வாரியாக அதற்கு பொறுப்பா ளர்கள் நியமித்து, வாரம் ஒரு நாள் குறிப்பிட்ட நேரத்தில் இந்த குப்பையை சேகரிக்க மாநகராட்சி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 100 கிலோவுக்கு மேல் குப்பை உற்பத்தியா கும் நிறுவனங்களில் குப்பையை சேக ரிப்பதற்கு தற்போது கட்டணம் வசூலிக் கப்படாது. வார்டுகளில் கம்பெனிகளில் இந்த குப்பையை சேகரிக்க உரிய வழி முறை ஏற்பாடு தயாராகி வருகிறது. அனைவருக்கும் உரிய அறிவிப்பு வழங் கப்படும். தொடர்புடைய அலுவலர் எண் ணும் வழங்கப்படும். பிளாஸ்டிக், பேப்பர், துணி, கார்ட்போர்டு அட்டை போன்ற உலர் கழிவுகளை மட்டும் சேக ரித்து மாநகராட்சி ஆட்கள் வாகனத்து டன் குறிப்பிட்ட நாட்களில் வரும்போது அவர்களிடம் வழங்க வேண்டும். எக்கார ணம் கொண்டும் இதை வெளியே கொட்டக் கூடாது, மற்ற உணவுப் பொருட்கள் போன்ற மக்கும் குப் பையை இந்த உலர் குப்பையுடன் கலக் கக் கூடாது என்று தெரிவித்தனர். இதற்கு உரிய ஒத்துழைப்பு வழங்கு வதாக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க இணைச் செயலாளர் ஆனந்த் தெரிவித் தார். உணவக உரிமையாளர் சங்கத்தின் சார்பில் பேசிய பாலு தங்கள் சங்கத் தின் சார்பில் தனியாக கூட்டம் போடுவ தாகவும், மாநகராட்சி அதிகாரிகள் வந்து விளக்கிக் கூற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். இத்துடன் உலர் கழிவுகளில் இருந்து பயோ கேஸ் தயாரிப்பது, இதர திடக்க ழிவு மேலாண்மைத் தொழில்நுட்பங் கள் குறித்து திருப்பூரில் தனியாக ஒரு எக்ஸ்போ (கண்காட்சி) நடத்தினால் இங்குள்ள தொழில் துறையினர் அதைப் பார்த்து புரி்ந்து கொண்டு தேவையான நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்று தொழில்துறை சார்ந்த ஒருவர் கூறினார். திருப்பூரில் சில குறிப்பிட்ட நிறுவனங்களில் திடக்கழிவு மேலாண்மை தொழில்நுட்பம் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது. தொழில் துறை யினருக்குத் தேவைப்பட்டால் அது பற்றி விளக்கம் அளிப்பதாக அதன் ஆலோச கர் தேவையான விளக்கம் அளிப்பதாக தெரிவித்தார்.
மக்கள் ஒத்துழைப்பு அவசியம்
மொத்தம் திருப்பூரில் 3 லட்சத்து 25 ஆயிரம் வரிவிதிப்புகள் உள்ளன. ஆனால் மாநகரில் 2500 பேர்தான் ஊழியர்கள் உள்ளனர். விகிதாசார அளவுப் படி இந்த எண்ணிக்கை எந்த வகையிலும் போதாது. எனவே மக்கள் ஒத்து ழைப்பு இல்லாமல் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது. வேறெங்கும் இடம் இல்லாததால் கடந்த இரண்டு மாதங்களில் 25 ஆயிரம் டன் குப்பை தேங்கி இருக்கிறது. எனவே தொழிற்சாலை உலர் கழிவுகளை அகற்றுவதற்கு முழு மையான ஒத்துழைப்பு தேவை. மீண்டும் பழையபடி உலர் கழிவுகளை சாலை யில் கொட்டினால் மிகக் கடுமையான அபராதம் விதித்தக்கபடும். திடக்கழிவு மேலாண்மை மக்கள் இயக்கமாக மாறாமல் தீர்வு கிடைக்காது. 80 ஆயிரம் குப்பை கூடைகள் வீடுகளில் உற்பத்தியாகும் மக்கும் குப்பை, மக்காத குப்பையை தனித்தனி யாகப் பிரித்து வாங்க பச்சை, நீல நிறத்தில் மொத்தம் 80 ஆயிரம் குப்பை கூடை கள் வாங்கி விநியோகம் செய்யப்பட உள்ளது. அவசரமாக திடக்கழிவு மேலாண்மைப் பணியை மேற்கொள்வதற்காக தமிழக அரசு ரூ.7.50 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தேவையில்லாத சர்ச்சை பல்வேறு தரப்பினர் சந்தேகங்கள் கேட்டதற்கு நகராட்சிகள் நிர்வாக இயக் குநர் மதுசூதன் ரெட்டி பதில் கூறினார். தன்னார்வலர்கள் என இக்கூட்டத்தில் பங்கேற்ற கிருஷ்ணசாமி, ஜான் உள்ளிட்டோர் பழைய நிலையைப் பற்றி பேசத் தொடங்கியபோது, இப்போது என்ன செய்ய வேண்டுமோ அதைப் பற்றி பேசி தீர்வு காண செயல்பட வேண்டும் என்று நிர்வாக இயக்குநர் கூறினார். ஜான் என்பவர் தேவையில்லாமல் வேறு விசயங்களைப் பேசியதால் கூட்டத் தில் பங்கேற்ற ஒரு தரப்பினர் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து எச்சரிக்கை செய்தனர்.