tamilnadu

img

தொழிலாளர் உரிமைகளை பாதுகாத்தபடியே தொழில் வளர்ச்சி - இதுவே கேரள மாடல்

தொழிலாளர் உரிமைகளை பாதுகாத்தபடியே தொழில் வளர்ச்சி - இதுவே கேரள மாடல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 24ஆவது அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2 முதல் 6ஆம் தேதி வரை மதுரையில் நடைபெறு கிறது. இந்த மாநாட்டை முன்னிட்டு  வியாழனன்று (மார்ச் 13) சென்னை யில் “தொழில் முதலீடுகள் - தொழி லாளர் உரிமைகள்” எனும் தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. மாநிலச் செய லாளர் பெ.சண்முகம் தலைமை யில் நடைபெற்ற இந்த கருத்தரங்கை தொடங்கி வைத்து, கேரள மாநில தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ் பேசினார். எனது மூச்சுக் காற்று கம்யூனிசம் அண்மையில் நடைபெற்ற கேரள மாநில மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட “புதிய கேரளத்தை உருவாக்கப் புதிய பாதைகள்” எனும் தீர்மானத்தைக் குறிப்பிட்டு அமைச்சர் பி.ராஜீவ் பேசுகையில், “மார்க்சிஸ்டுகள் தங்களது கொள்கை வழியிலிருந்து விலகு கின்றனர் என்றெல்லாம் வழக்கம் போல் கதை கட்டிவிடுகின்றனர்.

ஆனால் இந்திய அரசியல் அமைப்புக்குள் நின்று சாத்திய மான வகையில் மாற்றுக் கொள் கையை நாம் முன்னெடுக்கிறோம். இதற்கான அடிப்படை உல கிலேயே தேர்தல் மூலம் முதன் முறை 1957இல் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிப் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, முத லமைச்சர் இஎம்எஸ் நம்பூதிரிபாட் ‘‘எனது மூச்சுக் காற்று கம்யூனிசம் தான். ஆனால் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்குள் தான் மக்களுக்கான பணிகளை நாங்கள் செய்யவேண்டும்” என்று வானொலியில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டார். அப்போதைய நிதி அமைச்சர் அச்சுத்த மேனன், தொழில் வளர்ச்சிக்குத் தேவையான முதலீடுகள் எங்கி ருந்து வந்தாலும், அமெரிக்காவில் இருந்து வந்தாலும் கூட, கேரளா  வரவேற்கும். ஆனால், நியாயமான கட்டுப்பாடுகளோடு தான் அந்த மூலதனம் ஏற்கப்படும் என்று குறிப்பிட்டார். அம்பானி, அதானி எல்லாம் வராத அந்த நாட்களில் டாடா,  பிர்லா, சிங்கானியா போன்ற  பெருந்தொழில் நிறுவனங்களின் சுரண்டலுக்கு எதிராகக் கம்யூ னிஸ்டுகள் குரல் எழுப்புவது வழக்கம். இருந்தாலும், மேலே சொன்ன கட்டுப்பாடுகளின் அடிப்ப டையில் தொழில் தொடங்க கேர ளத்திற்கு வருமாறு பிர்லா குழு மத்தையே அழைத்தார் முத லமைச்சர் நம்பூதிரிபாட். அப்படி த்தான் கோழிக்கோட்டில் மாகூர் ரேயான் மில் உருவானது. கேரளத்தின் தற்போதைய தொழில் கொள்கைகள் 1.முத்தரப்பு கமிட்டிகள்:  நிறுவன அளவில், மாவட்ட அளவில், மாநில அளவில் நிர்வாக பிரதிநிதிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும்  அரசு தரப்பு என்று முத்தரப்பு முறை செயல்பாட்டில் இயங்குகிறது. 2.தொழிலாளர் பணி கலாச்சாரம் :  நோக்கு கூலி என்ற பழைய  முறைக்கு பதிலாக, திறன் மேம் படுத்திக் கொண்டு பணியாற்றும் கலாச்சாரம் ஊக்குவிக்கப்படு கிறது. 3.உற்பத்தியோடு இணைந்த ஊக்கத்தொகை: லாபத்தில் பங்கு என்கிற  வகையில் ஊதியம் உறுதி செய்யப் படுவதுடன், உற்பத்தியோடு இணைந்த ஊக்கத்தொகை, போனஸ் வழங்கவும் வகை செய்யப்பட்டிருக்கிறது. சிறு குறு நடுத்தரத் தொழில் வளர்ச்சி அதே போன்று மூன்றரை லட்சம் சிறு குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அண்மைக்காலத் தில் புதிதாக உருவாகியுள்ளன. தொழில் தொடங்க 4 சதவீத வட்டி யில் கடனுதவியும் வழங்கப்படு கிறது. புதிய தொழில் முனைவோ ரில் 31 சதவீதம் பெண்கள் ஆவர். கேரள மாநிலம் முழுவதும் 7.5 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

 குறிப்பாக உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்த அரசே கடைகளைத் திறந்து, கே ஷாப்பி எனும் ஆன்லைன் வர்த்தக தளமும் உரு வாக்கப்பட்டுள்ளது. சிறு நிறு வனங்களுக்கு காப்பீடு செய்து பிரீ மியத் தொகையில் 50 சதவீதம் அரசே ஏற்கிறது. தொழில் நெருக்க டிக்கு உடனடி தீர்வு காண ‘கிளி னிக்குகள்’ ஏற்படுத்தப்பட்டு, நிபுணர்கள் ஆலோசனை வழங்கு கின்றனர்’’ என கூறினார். தொழிற்சங்கங்கள் வளர்ச்சிக்குத் தடையா?  தொழில் முதலீடுகளுக்கும் தொழிலாளர் உரிமைகளுக்கும் மோதல் என்பது கட்டுக்கதை என்று  திட்டவட்டமாக மறுத்த அமைச்சர்  ராஜீவ் அதனை புள்ளி விவரங்களு டன் விளக்கினார். அதில்,”2008-2018 பத்தாண்டுகளில் தமிழகத்தில் வேலைநிறுத்தம் 26 சதவீதம்.

ஆனால் அதே காலத்தில் புதிய முதலீடுகள் 16 சதவீதம் வந்துள் ளது.  இதே பத்தாண்டு களில் வேலை நிறுத்தம் 17 சதவீதம் நடை பெற்ற மகாராஷ்டிரா விலும், 11 சதவீதம் நடைபெற்ற குஜ ராத்திலும் முதலீடுகள் பாதிக்கப்  படவில்லை. ஆனால் கேரளத்தில் நிரந்தரத் தொழிலாளர்கள் 46 சதவீதம் (தேசிய சராசரி 25%), பெண் தொழிலாளர்களில் 51  சதவீதம் நிரந்தரத் தொழிலாளர்கள். அறிவு சார் துறை வளர்ச்சி ஐடி துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மன உளைச்  சல்களிலிருந்து மீள உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படு கின்றன. தொழிலதிபர்களை அழைப்பதற்கு முன்பாகவே தொழிற்சங்க பிரதிநிதிகளை அழைத்து அவர்களது கோரிக்கை களை முன்னதாகவே கேட்டு நட வடிக்கை எடுக்கப்படுகிறது.

தற்போதைய சவால்கள் அதி கரித்துள்ள நிலையில், ஒன்றிய அரசின் பாரபட்சம், தானியங்கி மயமாக்கல், செயற்கை நுண்ண றிவு போன்றவற்றை எதிர் கொண்டும்,  தொழிலாளர் உரிமை களில் எந்த சமரசமும் செய்யாமல் தொழில் வளர்ச்சியை கேரளம் முன் னெடுத்து வருகிறது. தொழி லாளர் உரிமைகளில் கிஞ்சிற்றும் சமரசம் செய்யாமல் தொழில் முத லீடுகள் சாத்தியம், தொழில் வளர்ச்சியும் சாத்தியம் என்பதை கேரளம் மெய்ப்பித்துக் கொண்டி ருக்கிறது” என அமைச்சர் ராஜீவ் தெளிவாக எடுத்துரைத்தார்.