tamilnadu

விளையாட்டு

இந்தியன் வேல்ஸ் ஓபன் டென்னிஸ் ஆஸி., ஓபன் சாம்பியனை புரட்டியெடுத்த சபலென்கா

முக்கிய சர்வதேச தொடர்களில் ஒன் றான இந்தியன் வேல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசை யில் 5ஆவது இடத்தில் இருப்பவரும், நடப்பாண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் (ஆஸ்திரேலிய ஓபன்) பட்டத்தை வென்றவ ருமான மேடிசன் கீஸ், தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பெலாரசின் சபலென் காவை எதிர்கொண்டார். ஆஸ்திரேலிய ஓபன் கோப்பையை பறிகொடுத்ததற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் தொடக்கம் முதலே  அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சபலென்கா 6-0, 6-1 என்ற செட் கணக்கில் மேடிசன் கீஸை புரட்டியெடுத்து இறுதிக்கு முன்னேறி னார். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டி தொடரின் இறுதி ஆட்டத்தில் மேடிசன் கீஸ், சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி  மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 9ஆவது இடத்தில் உள்ள ரஷ்யாவின் ஆன்டிரிவா, தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள போலந்தின் ஸ்வியாடெக்கை 7-6 (7-1), 1-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார். ஆன்டிரிவாவை விட ஸ்வியாடெக் அதிரடியாக விளையாடக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\

உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்று காயம் காரணமாக நெய்மர் விலகல்

கால்பந்து உலகின் இள வரசன் என ரசிகர்க ளால் அன்போடு அழைக்கப்படும் பிரேசிலின் நெய்மர், மெஸ்ஸி (அர்ஜெண்டினா), ரொனால் டோ (போர்ச்சுக்கல்) ஆகியோருக்கு அடுத்து அதிக ரசிகர்களைக் கொண்ட வீரர் ஆவார். நெய்மர் தற்போது சவூதி அரேபிய லீக் தொடரில் இருந்து வெளி யேறி தனது சிறுவயது அணியான சன்டோஷ் அணியில் (பிரேசில் கிளப்) விளையாடி வருகிறார். இந்நிலையில், 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கால்பந்து உல கக்கோப்பை தொடரின் தகுதி சுற்று ஆட்டத்தில் இருந்து காயம் காரண மாக நெய்மர் விலகியுள்ளார். சமீ பத்தில் 17 மாதங்களுக்குப் பின் நெய்மர் பிரேசில் அணியில் இணைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், இடது தொடை காயம் காரணமாக உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில் இருந்து அவர் விலகியுள்ளார்.  தென் அமெரிக்க தகுதிச் சுற்றுப் போட்டியில் 5ஆவது இடத்தில் உள்ள  பிரேசில், மார்ச் 20ஆம் தேதி கொலம்பி யாவையும், மார்ச் 25 அன்று அர்ஜெண்டினாவையும் எதிர்கொள்ள உள்ளது. இந்த 2 ஆட்டங்களும் பிரேசில் அணிக்கு மிக முக்கியமானது என்ற நிலையில், அந்த அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் விலகி இருப்பது பிரே சிலுக்கு சிக்கலை ஏற்படுத்தும் எதிர்பார்க்கப்படுகிறது.

2021இல் எனக்கு கொலை மிரட்டல் வந்தது தமிழ்நாடு வீரர் வருண் சக்கரவர்த்தி

“2021ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு எனக்கு நிறைய மிரட்டல் வந்தது. இந்தியா வந்துவிட வேண்டாம். மீறி வந்தால் வெளிய வர முடியாதுனு மிரட்டுனாங்க; விமான நிலையத்தி லிருந்து வீடுவரைக்கும் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்துலாம் வந்துருக்காங்க, பயந்து ஒளியுற நிலைமைக்குலாம் நான் போயிருக்கேன்; ரசிகர்களோட உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அப்போ எவ்வ ளவு வெறுத்தாங்களோ இப்போ அவ்வளவு வாழ்த்துறாங்க, ரொம்ப சந்தோஷமா இருக்கிறது” என தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.