இந்தியா கூட்டணி எம்பிக்கள் வெளிநடப்பு
புதுதில்லி, பிப். 13 - வக்பு சட்டத் திருத்த மசோதாவில் மேற்கொள்ளப் பட வேண்டிய திருத்தங்கள் தொடா்பான கூட்டுக்குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதில், பாஜக எம்.பி., ஜெகதாம்பிகா பால் தலைமையிலான கூட்டுக்குழு விடம் எதிர்க்கட்சிகள் அளித்த 15 பக்கங்கள் அளவிலான ஆட் சேபணைகள் முழுமையாக புறந்தள்ளப்பட்டன. இதை எதிர்த்து, இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடா ளுமன்றத்தில் முழக்கமிட்டது டன், தங்களின் கண்டனத்தைப் பதிவு செய்யும் விதமாக வெளி நடப்பிலும் ஈடுபட்டனர்.
ஆ. ராசா, சு. வெங்கடேசன், ஆர். சச்சிதானந்தம் உள்ளிட்ட தமிழ்நாடு எம்.பி.க்களும் இந்த வெளிநடப்பில் கலந்து கொண்டனர். வக்பு சட்டத் திருத்த மசோதா குறித்து ஆராய பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமை யில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. ஆனால், அந்தக் கூட்டுக்குழுவில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முறையீடுகள் ஏற்கப்பட வில்லை. மாறாக, கூட்டுக்குழு உறுப்பினர்கள் மீதே இடைநீக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. பின்னர், பாஜக கூட்டணி எம்.பி.க்களே 655 பக்கங்கள் கொண்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளித்து, அதனை நாடாளு மன்றத்தின் இரு அவைகளி லும் வியாழனன்று தாக்கல் செய்துள்ளனர்.