இந்தியாவின் முதல் ஆங்கில பெண் கவிஞர்
ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதிய முதல் இந்திய பெண் கவிஞர், பிரெஞ்சு மொழியில்நாவல் எழுதிய முதல் இந்திய பெண் எழுத்தாளர் உட்பட பல்வேறு சிறப்புகளுக்குச்சொந்தக்காரர் தோரு தத். இவர் 1856ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்தார். இவரதுதந்தை, பிரிட்டிஷ் ஆட்சியின் போது இந்திய நிர்வாகத்தில் அரசு உயரதிகாரியாக இருந்தார். கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். இதனால், தோரு தத் கல்வி கற்பதில் எந்ததடையும் ஏற்படவில்லை. ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் சமஸ்கிருதப் பாடங்களை இவர்படித்தார். ஆங்கில இலக்கியங்கள் மீது தோரு தத் ஆர்வமாக இருந்தார். பிரபல ஆங்கில கவிஞர்ஜான்மில்டன் எழுதிய “பாரடைஸ் லாஸ்ட்’’ எனும் கவிதை நுால் பற்றி அவ்வப்போது சிலாகித்துபேசுவது இவரது வழக்கமாக இருந்தது. தோரு தத்தின் சகோதரர் உடல்நலக் குறைவால் இறந்த சம்பவம், அவரது குடும்பத்தினரை ஆழமாக பாதித்தது. 1869ஆம் ஆண்டு அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறமுடிவெடுத்தனர். கப்பல் மூலம் கல்கத்தாவில் இருந்து ஐரோப்பா புறப்பட்டனர். இந்தியாவில்இருந்து கப்பல் மூலம் ஐரோப்பாவுக்கு முதலில் பயணம் செய்த இந்தியப் பெண்களில், தோரு தத்அவரது சகோதரி அரு தத் ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவர். பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு தோரு தத் குடும்பம் பயணம்செய்தது. சில காலம் பிரான்சின் ‘’நைஸ்’’ என்ற நகரத்தில் தங்கியிருந்தனர். அங்கே பிரெஞ்சுமொழி கற்றுக் கொண்டார். இறுதியாக, 1871ஆம் ஆண்டு இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்நகரத்தில் குடியேறினர். 1873ஆம் ஆண்டு வரை அங்கே தங்கியிருந்தனர். இந்த காலகட் டத்தில்கேம்பிரிட்ஜ் பல்கலையில் நடக்கும் இலக்கியச் சொற்பொழிவுகளில் தவறாமல் கலந்துகொள்வார் தோரு தத். குறிப்பாக, ஆங்கில, பிரெஞ்சு இலக்கியங்கள் தொடர்பாக நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது அவரது வழக்கம். தினசரி நாள்குறிப்பு எழுதும்பழக்கமும் அவர் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக் கது. 1873ஆம் ஆண்டு தோரு தத் குடும்பம் மீண்டும் கொல்கத்தா திரும்பியது. 1876 ஆம் ஆண்டு ‘’சீதா,எ ஷீப் க்ளீன்ட் இன் பிரஞ்சு பீல்ட்ஸ்’’ எனும் ஆங்கில கவிதை நூலை வெளியிட்டார் தோரு தத்.இதன்மூலம், ஆங்கிலத்தில் கவிதை எழுதி, அதை புத்தகமாக வெளியிட்ட முதல் இந்திய பெண்எழுத்தாளர் என்ற சிறப்பைப் பெற்றார். 1877ஆம் ஆண்டு, உடல்நலக் குறைவால் திடீரெனஇறந்தார். அப்போது அவருக்கு வயது 21 மட்டுமே என்பதுதான் துயரம். தோரு தத் இறப்புக்குப் பின்னர், அவர் எழுதி வைத்திருந்தவைகளை அவரது குடும்பத்தினர் வெளியிட்டனர். அந்த வகையில், 1879 ஆம் ஆண்டு, அவர் பிரெஞ்சு மொழியில்எழுதிய, லு ஜர்னல் டி மேடமொயிசெல் டிஆர்வர்ஸ் எனும் நூல் வெளியிடப்பட்டது. இதன்மூலம், பிரெஞ்சு மொழியில் நாவல் எழுதிய முதல் இந்திய பெண் எழுத்தாளர்என்ற கூடுதல் சிறப்பை யும்அவர் பெற்றார். பின்னர், 1882ஆம் ஆண்டு, அவர் ஆங்கிலத்தில் எழுதிய, ஏன்சியன்ட் பாலட்ஸ் அண்ட் லெஜண்ட்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் என்ற ஆங்கில கவி தைபுத்தகம் வெளியானது. தோரு தத் எழுதிய 3 புத்தகங்களும் இப்போதும் வாசிப் பில் உள்ளது. காலங்கள் கடந்தும் தோரு தத் எழுத்துகள் பாராட்டுகளைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
