tamilnadu

img

பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்துக! பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்

பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்துக! பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில மாநாடு வலியுறுத்தல்

தருமபுரி, டிச.28 - தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தின் 7-ஆவது மாநில மாநாடு, தருமபுரியில் அமைந்துள்ள தோழர் எம்.ஆறுமுகம் நினை வரங்கத்தில் ஞாயிறன்று எழுச்சியுடன் நடை பெற்றது.  முன்னதாக, தருமபுரி ஆவின் அலுவலகம் முன்பிருந்து தொடங்கிய மாநாட்டுப் பேரணி, நான்கு ரோடு மற்றும் நேதாஜி புறவழிச்சாலை வழி யாக மாநாட்டு அரங்கை வந்தடைந்தது. விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எம். குமார், உதவிச்செயலாளர் சி.வெண்மணி சந்திரன்,  நிர்வாகிகள் எம்.காசிமாயன், ஏ.ராஜரத்தினம், மாநிலக்குழு உறுப்பினர் வி.சதாசிவம் ஆகியோர் தலைமையில் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட தியாகிகளின் நினைவு ஜோதிகளை  தலைவர்கள் பி.இளம்பரிதி, சாமி. நடராஜன், கே.பி.பெருமாள் மற்றும் பி.டில்லி பாபு ஆகியோர் பெற்றுக்கொண்டனர். மாநாட்டிற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.முகமது அலி தலைமை வகிக்க, மாநில  துணைத்தலைவர் கே.சி.இராமசாமி கொடி யேற்றினார். எம்.சிவாஜி அஞ்சலி தீர்மானத்தை வாசித் தார். வரவேற்புக்குழு தலைவர் பி.இளம்பரிதி வர வேற்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் பி.டில்லிபாபு மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்றினார். மாநில  பொதுச்செயலாளர் பி.பெருமாள், பொருளா ளர் ஏ.எம்.முனுசாமி ஆகியோர் அறிக்கைகளைச்  சமர்ப்பித்தனர். விவசாயிகள் சங்க மாநிலப் பொருளாளர் கே.பி.பெருமாள், சோ.அருச்சுனன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தீர்மானங்கள் தீவன விலை உயர்வால், பசும்பால் லிட்டருக்கு  ரூ.10 உயர்த்தி ரூ.45 ஆகவும், எருமைப்பால் ரூ.16 உயர்த்தி ரூ.60 ஆகவும் வழங்க வேண்டும்.  உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.10 ஊக்கத் தொகை வழங்க அரசு நிதி ஒதுக்க வேண்டும். உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி, கொள்முதல் செய்யும் இடத்திலேயே அளவு மற்றும் தரத்தைக்  கணக்கிட்டு வழங்க வேண்டும்.  அறிஞர் அண்ணா காப்பீடு திட்டத்தில் இயற்கை மற்றும் விபத்து மரணங்களுக்கு கூடு தல் இழப்பீடு வழங்குவதோடு, 50 சதவீத மானியத் தில் தீவனம் மற்றும் சத்துணவு திட்டத்தில் பால் வழங்க அரசு முன்வர வேண்டும். ஆவின் கொள்முதல் மற்றும் விற்பனையில் ஐஎஸ்ஐ (ISI)  முறையைப் பின்பற்ற வேண்டும், வேலூர் - திருப்பத்தூர் மாவட்டங்களுக்குத் தனி துணைப் பதிவாளர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் தேர்வு சங்கத்தின் மாநிலத் தலைவராக ஏ.சி.வெண்மணி சந்திரன், பொதுச்செயலாளராக பி.பெருமாள், பொருளாளராக பி.ரவி ஆகியோர்  தேர்வு செய்யப்பட்டனர்.  உதவித்தலைவர்களாக கே.முகமது அலி,  ஏ.எம்.முனுசாமி, எம்.சிவாஜி, என்.செல்லதுரை,  பி.ராமநாதன், ஜி.ராமசுப்பு ஆகியோரும், உதவிச் செயலாளர்களாக என்.ஜோதி, கே.அன்பு, எம்.அண்ணாமலை, ஆர்.கஜேந்திரன், எஸ்.கமலக் கண்ணன், ராதாகிருஷ்ணன் உட்பட 47 பேர் கொண்ட மாநிலக்குழு தேர்வு செய்யப்பட்டது.  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் நிறைவுரையாற்றி னார்.